கோரக்கி
கோரக்கி
घोराही उपमहानगरपालिका | |
---|---|
அடைபெயர்(கள்): हरित नगर, महको सहर | |
குறிக்கோளுரை: Clean Green Ghorahi | |
ஆள்கூறுகள்: 28°2′N 82°29′E / 28.033°N 82.483°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 5 |
மண்டலம் | ராப்தி மண்டலம் |
மாவட்டம் | தாங் |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.41 Low |
மனித வறுமைச் சுட்டெண் | 20.8 Very Low |
எழுத்தறிவு | 73% Medium |
அரசு | |
• வகை | மேயர்-மாநகராட்சி மன்றக் குழு |
• மேயர் | நாரு லால் சௌத்திரி |
• துணை மேயர் | சீதா நௌபனே |
• செயல் அலுவலர் | கிருஷ்ண பிரசாத் சப்கோடா |
பரப்பளவு of submetropolitan city | |
• நகரம் | 522.21 km2 (201.63 sq mi) |
தாங் மாவட்டம்: 2955sq km தாங் சமவெளி: 1550 sq km | |
ஏற்றம் | 701 m (2,300 ft) |
மக்கள்தொகை (2011)1,55,164 | |
• நகரம் | 1,55,164 |
• பெருநகர் | 1,56,164 Male: 70,000 Female: 85,000 |
தாங் மாவட்டம்: 5,48,141 தாங் சமவெளி: 3,51,023 | |
மொழிகள் | |
• வட்டார மொழிகள் | நேபாளி, குரூங், காம் மகர், |தாரு |
• அலுவல் மொழி | நேபாளி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 22400 |
இடக் குறியீடு | 082 |
இணையதளம் | www.ghorahimun.gov.np |
கோரக்கி (Ghorahi) (நேபாள மொழி|நேபாளி]]: घोराही उपमहानगरपालिका), நேபாளத்தின் ஏழாவது பெரிய நகரமும், துணைநிலை மாநகராட்சியும், தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.
அமைவிடம்
[தொகு]மத்தியமேற்கு நேபாளத்தின், மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில், உள்தராய் சமவெளியில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பழைய பெயர் திருபுவன்நகர் ஆகும்.
புவியியல்
[தொகு]கோரக்கி நகரம், காத்மாண்டிற்கு தென்கிழக்கே 413 கிமீ தொலவிலும்; ராப்தி மண்டலத்தின் பெரிய நகரமான கோரக்கியின் தெற்கில், சிவாலிக் மலைத்தொடரும்; வடக்கில் மகாபாரத மலைத்தொடரும் உள்ளது. இந்நகரத்தின் கிழக்கில் பபாய் ஆறு பாய்கிறது. மகாபாரத மலையடிவாரத்தில் அமைந்த கோரக்கி நகரம், கடல் மட்டத்திலிருது 2300 அடி (701 மீ) உயரத்தில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]தரிகோன் எனுமிடத்தில் அமைந்த தாங் வானூர்தி நிலையம், தாங் நகரத்திலிருந்து 23 கிமீ தொலவில் உள்ளது. காட்மாண்டு நகரத்திற்கு அடிக்கடி வானூர்தி சேவைகள் உள்ளது. இந்நகரத்திலிருது 152 கிமீ தொலைவில் நேபாள்கஞ்ச் பன்னாடு வானூர்தி நிலையம் உள்ளது.
மக்கள்தொகை
[தொகு]கோரக்கி மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 156,164 ஆகும்.[1] வேறு மாவட்டத்தவர்கள் மற்றும் மாநிலத்தவர்கள், வேலைவாய்ப்பிற்காக, இந்நகரில் அதிகமாக குடியேறுகின்றனர்.[2]
கல்வி
[தொகு]கோரக்கி நகரத்தின் சராசரி எழுத்தறிவு 73% ஆகும். நேபாள சமசுகிருத கல்லூரி, மகேந்திர பல்நோக்கி கல்லூரி, ஆயுர்வேதக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் இதனருகே உள்ளது. மத்திய மேற்கு நேபாளத்தில், கோராக்கி நகரம் கல்வி மையமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "घोराही उप-महानगरपालिकाको आधिकारिक वेभसाइटमा तपाईलाई स्वागत छ । - घोराही उप-महानगरपालिका". ghorahimun.gov.np.
- ↑ "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 12 October 2008. பார்க்கப்பட்ட நாள் 21 September 2008.
வெளி இணைப்புகள்
[தொகு]- [www.ghorahi.gov.np கோரக்கி நகரத்தின் இணையத்தளம்]