சேத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்திரி/கஸ் சேத்திரி


Up:கலு பாண்டே • அபிமன் சிங் பஸ்னேத் • அமர் சிங் தாபா
கீழ்:பீம்சென் தபா • பாலபத்திர குன்வர் • ஜங் பகதூர் ராணா
மொத்த மக்கள்தொகை
43,98,053[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 நேபாளம்
மொழி(கள்)
நேபாளி மொழி
சமயங்கள்
இந்து சமயம் (99%) மற்றும் குல தெய்வ வழிபாடு
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பகுன், தாக்குரி, ராஜ்புத்

சேத்திரி (Kshetri or Chhetri (நேபாளி: क्षेत्री) நேபாள நாட்டில் இந்தோ-ஆரிய மொழிகள் பேசும், மலை வாழ் கஸ் இராசபுத்திர சத்திரிய இன மக்கள் ஆவார்.[2] சேத்திரி இன மக்கள் 1951 வரை நேபாள அரசியலிலும், இராணுவத்திலும் பெரும் பங்கு வகித்தனர்.

வரலாறு[தொகு]

காஸ் இராச்சியத்தின் படைவீரர்களான சேத்திரிகள், ஒன்றுப்பட்ட நேபாள இராச்சியத்தை நிறுவுவதற்கு ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின், அமைச்சர்களாகவும், படைத்தலைவர்களாகவும், போர் வீரர்களாகவும் பணியாற்றியவர்கள்.[3] நேபாள இராச்சிய அரசவையில் கஜி கலாக் எனப்படும் பஸ்யனேத், பாண்டே, தாபா, குன்வர் மற்றும் பிஸ்தா எனும் ஐந்து முக்கிய சேத்திரி குடும்பத்தினர் அரசப் பிரமுகர்களாக இடம் பெற்றிருந்தனர்.

நேபாள அரண்மனை அரசியலில், பாண்டே மற்றும் தாபா சேத்திரிகள் தங்களுக்கிடையே அரசியல் பகைமை உணர்வுடன் செயல்பட்டனர். பாண்டேக்களுக்கு பஸ்யனேத்களும், தாபாக்களுக்கு குன்வர்களும் ஆதரவு அளித்தனர். இறுதியில் குன்வர்கள், தாபா குழுவின், நேபாள பிரதம அமைச்சரான மாதவர் சிங் தபாவை, 19 செப்டம்பர் 1846ல் கோத் படுகொலைகள் போது கொன்றனர். இதனால் குன்வர் குழுவின் தலைவர் ஜங் பகதூர் ராணா நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் குன்வர் குல குடும்பத்தினர், நேபாள அரசியலில் 1951 முடிய நேபாள மன்னரை மீறி ஆதிக்கம் செலுத்தினர்.[4]

குன்வர்கள் தங்களை பெயருக்குப் பின்னால் ராணா எனும் பட்டத்தை இட்டுக்கொண்டனர். ராணா எனில் மன்னர் எனப்பொருளாகும். பொது மக்கள் மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் பெரும் போராட்டங்களுக்கிடையே, 1951ல் குன்வர் எனும் ராணாக்களின் பரம்பரை ஆட்சி பறிக்கப்பட்டது. மீண்டும் நேபாளத்தில் ஷா வம்ச மன்னராட்சி நிறுவப்பட்டது.[5]

சேத்திரிகளின் குடும்பப் பெயர்கள்[தொகு]

அதிகாரி, வகலே, பருவால், பொக்ரா, பஸ்யனேத், பண்டாரி, பிஸ்தா, புதா, கார்க்கி, கத்ரி, குன்வர், மகத், மகாதரா, பாண்டே, புன்வர், ராணா, ரத்தோர், ரவுத், ராவல், ராயமஜ்கி, சில்வால், சுயால், தாண்டன், தாபா முதலியன.

ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தை உருவாக்க பாடுபட்ட பிற சேத்திரிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்திரி&oldid=2776758" இருந்து மீள்விக்கப்பட்டது