மத்திய வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மத்திய வளர்ச்சி பிராந்தியம்
Madhyamānchal Bikās Kshetra
நேபாள வளர்ச்சி பிராந்தியங்கள்
Location of மத்திய வளர்ச்சி பிராந்தியம்
நாடு நேபாளம்
நேபாள வளர்ச்சி பிராந்தியங்கள்மத்திய வளர்ச்சி பிராந்தியம்
தலைமையிடம்ஹெடௌடா, மக்வான்பூர் மாவட்டம், நாராயணி மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்27
நேர வலயம்நேபாள நேரம் (ஒசநே+5:45)

மத்திய வளர்ச்சி பிராந்தியம் (Central Development Region) (நேபாளி: मध्यमाञ्चल विकास क्षेत्र, மத்தியாஞ்சல் வளர்ச்சி பிராந்தியம்) நேபாளத்தின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களில் ஒன்றாகும்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு நகரத்துடன் கூடிய இப்பிராந்தியம், மத்திய கிழக்கு நேபாளத்தில் அமைந்துள்ளது. நாராயணி மண்டலத்தின், மக்வான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெடௌடா நகரம் இதன் நிர்வாகத் தலைமையிட நகரமாக அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

மத்திய வளர்ச்சி மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சி பகுதியும், கிழக்கில் கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், தெற்கில் இந்தியாவும், மேற்கில் மேற்கு வளர்ச்சி பிராந்தியமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் தொகையியல்[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2,64,94,504 மொத்த மக்கள் நேபாள மக்கள் தொகையில், மத்திய வளர்ச்சி பிராந்தியம் மட்டும் 9,656,985 அளவிற்கு அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமாக உள்ளது.

மொழிகளும், இன மக்களும்[தொகு]

இப்பிராந்தியத்தில் நேபாள மொழி, போஜ்புரி மொழி, லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி, குரூங், நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி, திபெத்திய மொழி, மஹர் மொழி, மைதிலி மொழி மற்றும் உருது மொழி பேசும் இந்துக்கள், இசுலாமியர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், சமயம் சாராத கிராந்தி மக்கள் போன்ற பழங்குடி மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

புவியியல்[தொகு]

மத்திய வளர்ச்சி பிராந்தியமும் மூன்று விதமான புவியியல் பகுதிகளைக் கொண்டது. வடக்கில் இமயமலை பகுதிகளும், நடுவில் மலைப்பாங்கான பகுதிகளும், தெற்கில் தராய் சமவெளி பகுதிகளையும் கொண்டுள்ளது. மத்திய வளர்ச்சி பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக தராய் சமவெளிகள் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

மத்திய வளர்ச்சி பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளதால், இதன் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ் மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. [1] [2]

மண்டலங்களும் மாவட்டங்களும்[தொகு]

மத்திய வளர்ச்சி பிராந்தியம் மூன்று மண்டலங்களும், 19 மாவட்டங்களுடன் கூடியது.

ஜனக்பூர் மண்டலம்[தொகு]

ஜனக்பூர் மண்டலத்தில் தனுஷா மாவட்டம், மகோத்தரி மாவட்டம், சர்லாஹி மாவட்டம், சிந்துலி மாவட்டம், ராமேச்சாப் மாவட்டம் மற்றும் தோலகா மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.

பாக்மதி மண்டலம்[தொகு]

பாக்மதி மண்டலத்தில் பக்தபூர் மாவட்டம், தாதிங் மாவட்டம், காத்மாண்டு மாவட்டம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டம், லலித்பூர் மாவட்டம், நுவாகோட் மாவட்டம், ரசுவா மாவட்டம், சிந்துபால்சோக் மாவட்டம் என எட்டு மாவட்டங்கள் அடங்கியுள்ளது.

நாராயணி மண்டலம்[தொகு]

நாராயணி மண்டலத்தில் பாரா மாவட்டம், பர்சா மாவட்டம், ரவுதஹட் மாவட்டம், சித்வன் மாவட்டம், மக்வான்பூர் மாவட்டம் என ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உலகப் பாரம்பரியக் களங்களான அனுமன் தோகா நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம், பதான் தர்பார் சதுக்கம், பசுபதிநாத் கோவில், காத்மாண்டு நகர சதுக்கம், சித்வான் தேசியப் பூங்கா [3][4] ஜானகி கோயில் மற்றும் சங்கு நாராயணன் கோயில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]ஆள்கூற்று: 27°42′N 85°20′E / 27.700°N 85.333°E / 27.700; 85.333