கிரிஜா பிரசாத் கொய்ராலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Girija Prasad Koirala
गिरिजा प्रसाद कोइराला
Girija Prasad Koirala.png
நேபாளப் பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 25 2006 – ஆகஸ்ட் 18 2008
அரசர் ஞானேந்திரா
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
துணை ராம் சந்திர பவுடல்
முன்னவர் சேர் பகதுர் தெயுபா
பின்வந்தவர் பிரசந்தா
பதவியில்
மார்ச் 22 2000 – ஜூலை 26 2001
அரசர் பிரேந்திரா
திபேந்திரா
ஞானேந்திரா
முன்னவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்வந்தவர் சேர் பகதுர் தெயுபா
பதவியில்
ஏப்ரல் 15 1998 – மே 31 1999
அரசர் பிரேந்திரா
முன்னவர் சூரிய பகதுர் தாப்பா
பின்வந்தவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பதவியில்
மே 26 1991 – நவம்பர் 30 1994
அரசர் பிரேந்திரா
முன்னவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்வந்தவர் மன்மோகன் அதிகாரி
நேபாள நாட்டு தலைவர்
நடப்பின் படி
பதவியில்
ஜனவரி 15 2007 – ஜூலை 23 2008
முன்னவர் ஞானேந்திரா (நேபாள அரசராக)
பின்வந்தவர் ராம் பரன் யாதவ் (நேபாளக் குடியரசுத் தலைவராக)
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 20, 1925
பீகார், இந்தியா
இறப்பு மார்ச்சு 20, 2010(2010-03-20) (அகவை 85)
கத்மண்டு, நேபாளம்
அரசியல் கட்சி நேபாள காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) சுஷ்மா கொய்ராலா
பிள்ளைகள் சுஜாத்தா கொய்ராலா
இருப்பிடம் கத்மந்து, நேப்பாளம்
சமயம் இந்து
இணையம் [1]

கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறையாக நேபாளத்தின் பிரதமராக பணியாற்றியவர். தற்போது நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார்.

"இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்த போது கள்ள நோட்டு அடித்தேன்; பயணிகள் விமானத்தை கடத்த திட்டம் தீட்டி கொடுத்தேன்' என ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தவர். நேபாளத்தில், 1970களில் மன்னர் ஆட்சியின் போது, அரசியல் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பி.பி.கொய்ராலா. அந்நாட்டில், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர். இவரது சகோதரர் தான் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மன்னர் ஆட்சியின் கெடுபிடி காரணமாக, கிரிஜா பிரசாத் கொய்ராலா இந்தியாவுக்கு தப்பி வந்து தலைமறைவாக வாழ்ந்தார். அப்போது, கட்சித் தொண்டர்களை காப்பாற்ற, தாங்கள் செய்த சட்டவிரோத செயல்களை கிரிஜா பிரசாத் கொய்ராலா வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

தனியார் "டிவி'க்கு அவர் அளித்த பேட்டி வருமாறு இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்த போது, கட்சித் தொண்டர்களுக்கு உதவ பணம் தேவைப்பட்டது. இதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை போல, ஏராளமான கள்ள நோட்டுகளை அடித்தோம். கள்ள நோட்டு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிபுணர்களை வரவழைத்தோம். இந்த பணத்தை கட்சித் தொண்டர்களுக்கு வாரி வழங்கினோம். இந்திய வங்கிகளிலும் அந்த பணத்தை, "டிபாசிட்' செய்தோம்.கடந்த 1975ம் ஆண்டு, காத்மாண்டு நகரில் இருந்து பிராட்நகர் என்ற நகருக்கு பயணிகள் விமானம் சென்றது. இந்த விமானத்தில், நேபாள ரிசர்வ் வங்கி ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை அனுப்பி வைத்தது. அந்த பணத்தை கைப்பற்ற, விமானத்தை கடத்த திட்டமிட்டோம். விமான கடத்தலை எப்படி மேற்கொள்வது என திட்டம் போட்டு கொடுத்தது நான் தான். எனது முன்னாள் அரசியல் ஆலோசகர் பீரேந்திரா தகால், துர்கா சுபதி ஆகியோர் தான் இந்த திட்டத்தை நிறைவேற்றியவர்கள். விமான கடத்தலை முடித்த பிறகு, அவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டனர். விமான கடத்தலில் நான் நேரிடையாக ஈடுபடவில்லை என்றாலும், அதற்கான முக்கிய மூளையாக செயல்பட்டேன். இவ்வாறு பிரதமர் கொய்ராலா கூறியுள்ளார்.