மாத்ரிக பிரசாத் கொய்ராலா
மாத்திரிக பிரசாத் கொய்ராலா मातृका प्रसाद कोइराला | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவுக்கான நேபாளத் தூதுவர் | |
பதவியில் 1961–1964 | |
18வது நேபாள பிரதம அமைச்சர் | |
பதவியில் 16 நவம்பர் 1951 – 14 ஆகஸ்டு 1952 | |
ஆட்சியாளர் | மன்னர் திரிபுவன் |
முன்னையவர் | மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா |
பின்னவர் | மன்னர் திரிபுவனின் நேரடி ஆட்சி |
பதவியில் 15 சூன் 1953 – 14 ஏப்ரல் 1955 | |
ஆட்சியாளர்கள் | திரிபுவன், மகேந்திரா |
முன்னையவர் | மன்னர் திரிபுவனின் நேரடி ஆட்சி |
பின்னவர் | மன்னர் மகேந்திராவின் நேரடி ஆட்சி |
நேபாளி காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் | |
பதவியில் 12 ஏப்ரல் 1950 – 26 மே 1952 | |
பின்னவர் | விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வாரணாசி, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 சனவரி 1912
இறப்பு | 11 செப்டம்பர் 1997 விராட்நகர், நேபாளம் | (அகவை 85)
பெற்றோர் | கிருஷ்ண பிரசாத் கொய்ராலா மோகனகுமாரி |
உறவினர் | விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, கிரிஜா பிரசாத் கொய்ராலா |
மாத்ரிக பிரசாத் கொய்ராலா (Matrika Prasad Koirala) (நேபாளி: मातृका प्रसाद कोइराला ⓘ; (1 சனவரி 1912 – 11 செப்டம்பர் 1997)[1] இரண்டு முறை நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]
தனி நபர் வாழ்க்கை
[தொகு]கிருஷ்ண பிரசாத் கொய்ராலா - மோகனகுமாரி இணையருக்கு 1912ல் வாரணாசியில் பிறந்தவர். இவரது உடன்பிறப்புகளான விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மற்றும் கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளத்தின் பிரதம அமைச்சர்களாக இருந்தவர்கள். இவரது மூன்றாவது உடன்பிறப்பான தாரினி பிரசாத் கொய்ராலா ஊடகவியளராக பணியாற்றியவர்.
அரசியல் பணி
[தொகு]நேபாள இராச்சியத்திலிருந்து, பிரித்தானிய இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட தன் தந்தையுடன், மாத்திரிக பிரசாத் கொய்ராலா, தன் தம்பியர்களுடன் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து 1930களில் மூன்று மாதம் சிறை சென்றவர்.[3] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, பீகார் மாகாணத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததால், மாத்திரிக பிரசாத் கொய்ராலா, பிகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் நியமிக்கப்பட்டார்.
பின்னர் நேபாள இராச்சியத்திற்கு சென்று, ராணா வம்ச பிரதம அமைச்சர்களுக்கு எதிராக, தங்க பிரசாத் ஆச்சாரியா தலைமையில் போராட்டங்களில் பங்கெடுத்தார். ஏப்ரல் 1950ல் மாத்திரிக பிரசாத் கொய்ராலா நேபாளி காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவரானார்.[4] 1951ல் நேபாள இராச்சியத்தில் ராணா வம்ச பரம்பரை பிரதமர் ஆட்சி முடிவுக்கு வந்த போது, மாத்திரிக பிரசாத் கொய்ராலா, நேபாள காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதம அமைச்சராக 16 நவம்பர் 1951 முதல் 14 ஆகஸ்டு 1952 முடிய பதவி வகித்தார்.
1952ல் மாத்திரிக பிரசாத் கொய்ராலா நேபாள அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டபப்ட்டு நேபாள காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.[5]
பின்னர் நேபாள பிரஜா கட்சியின் சார்பாக, 15 சூன் 1953 முதல் 14 ஏப்ரல் 1955 முடிய, மாத்திரிக பிரசாத் கொய்ராலா இரண்டாம் முறையாக பிரதம அமைச்சர் பதவி வகித்தார்.
மாத்திரிக பிரசாத் கொய்லாரா, ஐக்கிய நாடுகள் அவையில் நேபாளத்தின் பிரதிநிதியாகவும், 1961 - 1964 முடிய ஐக்கிய அமெரிக்காவில் நேபாளத் தூதுவராகவும் பணியாற்றினார்.[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nepal: Former prime minister dies
- ↑ worldstatesmen.org
- ↑ Uhash, Rupesh. "Bisheshwor Prasad Koirala". Spiny Babbler. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 December 2013.
- ↑ Nepali Congress:An introductionபரணிடப்பட்டது 8 பெப்பிரவரி 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Nepali Congress". Important Landmarks. Nepali Congress. பார்க்கப்பட்ட நாள் 26 December 2013.
- ↑ "Frist Lions Club in Nepal". Lions Clubs International District 325 A1 Nepal. Lions Club. Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 27 December 2013. "He was nominated as a permanent representative of United Nations Organization and was appointed as Nepal’s Ambassador to United States of America from 1961-64"