லிச்சாவி நாடு
லிச்சவி நாடு (Licchavi Kingdom) நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் கிபி 470 முதல் 750 முடிய இருந்த பண்டைய நாடாகும். இந்நாட்டை தற்கால இந்தியாவின் பிகார் மாநிலத்தின் மிதிலைப் பிரதேசத்தின் வைசாலி நகரத்தின் லிச்சாவி குலத்தினர், காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி கிபி நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லிச்சாவி இராச்சியத்தை நிறுவினர்.[1]
அரசு
[தொகு]லிச்சாவிகள் தலைமை அமைச்சர், தலைமைப் படைத்தலைவர் மற்றும் நிலக்கிழார்கள் உதவியுடன் மகாராஜா பட்டத்துடன் லிச்சாவி நாட்டை ஆண்டனர்.
லிச்சாவிகளும் குப்தர்களும்
[தொகு]மகத நாட்டின் குப்தப் பேரரசர் முதலாம் சந்திரகுப்தர், நேபாள லிச்சாவிகளின் இளவரசி குமாரதேவியை மணந்தவர்.
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும்.[2] பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில், சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.[3]
ஆட்சியாளர்கள்
[தொகு]லிச்சாவி நாட்டை ஆண்ட லிச்சாவி குல மன்னர்கள் பின்வருமாறு:[4]
- 185 முதலாம் ஜெயதேவ வர்மா
- வசுராஜா என்ற வசுதத்த வர்மா
- விஸ்வதேவன் கிபி 400
- சங்கரதேவன் கிபி 425
- தர்மதேவன் கிபி 450
- முதலாம் மானதேவன் 464-505
- மஹிதேவன் கிபி 505-506
- வசந்ததேவன் 506-532
- மனுதேவன்
- வாமனதேவன் 538
- ராமதேவன் 545
- அமரதேவன்
- அகாமதேவன்
- பௌமகுப்தன் என்ற பூமிகுப்தர் 567 - 590
- கங்கதேவன் 567-573
- இரண்டாம் மானதேவன் 575/576
- முதலாம் சிவதேவன 590-604
- அம்சுவர்மன் 605-621
- உதயதேவன் 624
- துருவதேவன் 624-625
- பீமார்ஜுனதேவன் 631-641
- நரேந்திரதேவன் 643-679
- இரண்டாம் சிவத்தேவன் 694-705
- இரண்டாம் ஜெயதேவன் 713-733
- இரண்டாம் சங்கரதேவன் 748-749
- மூன்றாம் மானதேவன் 756 -
- பலிராஜன் 826
- பலதேவன் 847
- நான்காம் மானதேவன் 877
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://books.google.co.uk/books?id=4ff2gk27p9oC&pg=PA437&dq=Licchavis+conquered+Nepal+bihar&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=Licchavis%20conquered%20Nepal%20bihar&f=false
- ↑ Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, University of Calcutta, Calcutta, pp.468-9
- ↑ Lahiri, Bela (1974) Indigenous States of Northern India (circa 200 BC - 320 AD), University of Calcutta, Calcutta, p.71,71n
- ↑ Tamot, Kashinath and Alsop, Ian. "A Kushan-period Sculpture, The Licchavi Kings", Asianart.com
வெளி இணைப்புகள்
[தொகு]- Tamot, Kashinath and Alsop, Ian. "A Kushan-period Sculpture, The Licchavi Kings", Asianart.com
- History of Nepal, Thamel.com
- "Nepal: The Early Kingdom of the Licchavis, 400-750", Library of Congress Countryreports.org (September, 1991)
- Vajrācārya, Gautamavajra, "Recently Discovered Inscriptions of Licchavi, Nepal", Kailash - Journal of Himalayan Studies, Volume 1, Number 2, 1973. (pp. 117-134) பரணிடப்பட்டது 2008-09-27 at the வந்தவழி இயந்திரம்