ஹெடௌதா

ஆள்கூறுகள்: 27°25′N 85°02′E / 27.417°N 85.033°E / 27.417; 85.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெடௌதா (Hetauda )
हेटौंडा
துணை-நிலை மாநகராட்சி
ஹெடௌதா (Hetauda ) is located in நேபாளம்
ஹெடௌதா (Hetauda )
ஹெடௌதா (Hetauda )
நேபாளம்
ஆள்கூறுகள்: 27°25′N 85°02′E / 27.417°N 85.033°E / 27.417; 85.033
நாடுநேபாளம்
மாநிலம்மாநில எண 3
மாவட்டம்மக்வான்பூர் மாவட்டம்
அரசு
 • வகைதுணை-நிலை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்261.59 km2 (101.00 sq mi)
ஏற்றம்345 m (1,132 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்153,875
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்44100, 44107
தொலைபேசி குறியீடு057
இணையதளம்www.hetaudamun.gov.np
ஹடௌதா நகரத்தின் காட்சி

ஹெடௌதா (Hetauda) (நேபாளி: हेटौडा, மத்திய நேபாளத்தின் மாநில எண் 3ல் உள்ள மக்வான்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், துணை-நிலை மாநகராட்சியும் ஆகும். [1]

2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ஹெடௌதா நகரத்தின் மக்கள் தொகை 1,54,660 1,53,875 ஆகும். இதில் ஆண்கள் 76,511 ஆகவும்; பெண்கள் 78,149 ஆகவும் உள்ளனர். [2]

ஹெடௌதா நகரம் திரிபுவன் நெடுஞ்சாலை மற்றும் மகேந்திரா நெடுஞ்சாலைகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. ஹெடௌதா நகராட்சி 1969ல் நிறுவப்பட்டது.

நேபாளத்தின் தலைநகரம் காட்மாண்டிற்கு தென்கிழக்கே 76 கிமீ தொலைவில் உள்ளது.

புவியியல்[தொகு]

மலைகளால் சூழ்ந்த, உள் தராய் சமவெளியில் ஹெடௌதா நகரம் உள்ளது. இந்நகரத்தின் வடக்கில் மகாபாரத மலைத்தொடர்களும்; தெற்கில் சிவாலிக் மலைத் தொடர்களாலும் சூழ்ந்துள்ளது. கண்டகி ஆறு தப்தி ஆறு மற்றும் சமாரி ஆறுகள் இந்நகரத்தில் பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 300-390 மீட்டர் உயரத்தில் உள்ள ஹடௌதா நகரத்தின் மொத்த பரப்பளவு 261 சகிமீ ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

ஹெடௌதா தொழில் நகரம், குடிசைத் தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் கொண்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெடௌதா&oldid=2498101" இலிருந்து மீள்விக்கப்பட்டது