நேபாள மாநில எண் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாநில எண் 3
மாநிலம்
Provinces of Nepal 2015.png
மாநில எண் 3ல் உள்ள 13 மாவட்டங்கள்
மாநில எண் 3ல் உள்ள 13 மாவட்டங்கள்
நாடு நேபாளம்
தலைநகரம்ஹெடௌதா
முக்கிய நகரங்கள்காட்மாண்டு, லலித்பூர், நேபாளம்
மாவட்டங்கள்13 மாவட்டங்கள்
அரசு
 • Bodyமாநில அரசு எண் 3
 • ஆளுநர்அனுராதா கொய்ராலா
 • முதலமைச்சர்தேர்மணி பௌதேல் ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
 • சபாநாயகர்சானு குமார் சிரேஸ்தா
 • தேர்தல் தொகுதிகள்
 • மாநில சட்டமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்20
மக்கள்தொகை
 • மொத்தம்5
 • அடர்த்தி270
இனங்கள்நேபாளிகள்
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
GeocodeNP-TW
முக்கிய மொழிகள்நேபாளி மொழி, தமாங் மொழி மற்றும் நேபாள் பாஷா
பிற மொழிகள்தாரு மொழி, மகர் மொழி, குரூங் மொழி, ஜிரில் மொழி முதலியன

நேபாள மாநில எண் 3 (Province No. 3), புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, 20 செப்டம்பர் 2015 அன்று நிர்வாக வசதிக்காக நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. [1] நேபாள மாநில எண் 3 நேபாள மாநிலங்களில் மூன்றாவதாக அமைந்துள்ளது.

இம்மாநிலத்திற்கு பாக்மதி மாநிலம் எனப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தற்காலிகத் தலைநகரம் ஹெடௌதா ஆகும்.

இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், மலைகளையும், மலைத்தொடர்களையும் கொண்டது. இம்மாநிலத்தின் நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காட்மாண்டு உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்களால் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும். நேபாள மாநில எண் 3-இன் பரப்பளவு 20,300 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள் தொகை 55,29,452 ஆகவும் உள்ளது[2]

அமைவிடம்[தொகு]

காடுகள், மலைகள், மலைத்தொடர்களுடைய 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதிகளையும், தெற்கில் நேபாள மாநில எண் 2யும், கிழக்கில் நேபாள மாநில எண் 1-யும், மேற்கில் நேபாள மாநில எண் 4-யும் எல்லையாகக் கொண்டுள்ளது.

மாநில எண் 3-இன் மாவட்டங்கள்[தொகு]

இம்மாநிலம் 13 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

1. தோலகா மாவட்டம்
2. ராமேச்சாப் மாவட்டம்
3. சிந்துலி மாவட்டம்
4. காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
5. சிந்துபால்சோக் மாவட்டம்
6. ரசுவா மாவட்டம்
7 நுவாகோட் மாவட்டம்
8. தாதிங் மாவட்டம்
9. சித்வன் மாவட்டம்
10. மக்வான்பூர் மாவட்டம்
11. பக்தபூர் மாவட்டம்
12. லலித்பூர் மாவட்டம்
13. காத்மாண்டு மாவட்டம்

அரசியல்[தொகு]

இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்களில் 66 உறுப்பினரகள் நேரடித் தேர்தலிலிலும், 44 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 33 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

முதலமைச்சர்[தொகு]

( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியக் கூட்டணி அரசின் தலைவர், தேர்மணி பௌதேல் ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [3]

மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[தொகு]

இம்மாநிலத்தின் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 81 இடங்களையும், நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 29 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிதாசாரத்தில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 42 677,317 35.81 16 58
நேபாளி காங்கிரஸ் 7 559,249 29.57 14 21
மாவோயிஸ்ட் மையம் 15 316,876 16.75 8 23
விவேகசீல சஜா கட்சி 0 124,442 6.58 3 3
ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி 0 59,268 3.13 1 1
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி 1 41,610 2.20 1 2
ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி (ஜனநாயகம்) 0 28,855 1.53 1 1
நயா சக்தி சக்தி 1 23,958 1.27 0 1
பிறர் 0 59,731 3.16 0 0
மொத்தம் 66 1,891,306 44 110

சமயம்[தொகு]Circle frame.svg

மாநில எண் 3-இல் சமயம்

  பிறர் (0.98%)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  2. http://www.statoids.com/unp.html
  3. Province 3 CM Poudel takes oath
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநில_எண்_3&oldid=2738807" இருந்து மீள்விக்கப்பட்டது