சிந்துபால்சோக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிந்துபால்சோக் மாவட்டம் (நேபாளி: सिन्धुपाल्चोक जिल्ला) என்பது நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்று. இது பாகுமதி கோட்டத்திற்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 2,542 சதுர கி.மீ. இதன் தலை நகரம், சௌதாரா நகரம். மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.[1]. 25 ஏப்ரல் 2015 அன்று ஏற்பட்ட நேபாள நிலநடுக்கத்தில் இப்பகுதியில் மட்டும் 40,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

ஊடகம்[தொகு]

லோக்பிரியா தைனிக், சிந்துபால்சோக் உள்ளிட்ட நேபாள மொழி நாளேடுகள் வெளியாகின்றன.

சுற்றுலா[தொகு]

இங்கு கௌராதி பீமோஷ்வர் கோயில், தௌதாலி மாய் கோயில், சுங்கோசி கபேஷ்வர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இங்கு படகு போக்குவரத்தும் உண்டு. தாம்சே, குன்டே, யங்கிமா தந்தா உள்ளிட்ட மலைப்பகுதிகளும் இங்குள்ளன. மலை ஏற்ற வீரர்களுக்கு இம்மாவட்டம் பொருத்தமான இடமாக உள்ளது.

இது காத்மண்டுவில் இருந்து நூறு கி.மீ தொலைவில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]