நேபாள மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாள மாநில சட்டமன்றம் ( Pradesh Sabha or Provincial Assembly), நேபாள மாநிலங்கள் ஓரவை முறைமை கொண்ட சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது.[1]

2015 நேபாள அரசியலமைச் சட்டத்தின் பகுதி 14, விதி 176ன் படி நேபாள நாட்டின் ஏழு மாநிலங்களில் ஓரவை முறைமை கொண்ட மாநில சட்டமன்றங்கள் நிறுவ வகை செய்யப்பட்டுள்ளது. [2] ஏழு மாநிலங்களின் 550 சட்டமன்ற 550 உறுப்பினர்களில், 330 உறுப்பினர்கள் (60%) நேரடியாகவும், 220 (40%) உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர். [3]

நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.

மேலும் மாநில சட்டமன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[4]

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, , முதல் முறையாக, 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் ஏழு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக, நடைபெற்றது.[5] [6]

மாநில சட்டமன்றம் நேரடித் தேர்தலில் - இடங்கள் விகிதாச்சாரத் தேர்தலில் - இடங்கள்
மாநில எண் 1 56 37
மாநில எண் 2 64 43
மாநில எண் 3 66 44
மாநில எண் 4 36 21
மாநில எண் 5 52 39
கர்ணாலி பிரதேசம் 24 15
மாநில எண் 67 32 21
மொத்தம் 330 (60%) 220 (40%)

மாநில எண் 1 சட்டமன்றம்[தொகு]

14 மாவட்டங்கள் கொண்ட நேபாள எண் 1ன் சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கவுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்கள்தொகை விவரம்.[7] மேலும் 37 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

# மாவட்டம் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 தாப்லேஜுங் மாவட்டம் 2 126448
2 பாஞ்சதர் மாவட்டம் 2 190591
3 இலாம் மாவட்டம் 4 287916
4 ஜாப்பா மாவட்டம் 10 902750
5 மொரங் மாவட்டம் 12 965370
6 சுன்சரி மாவட்டம் 8 753328
7 தன்குட்டா மாவட்டம் 2 161399
8 சங்குவாசபா மாவட்டம் 2 158222
9 போஜ்பூர் மாவட்டம் 2 180889
10 தேஹ்ரதும் மாவட்டம் 2 100869
11 ஒகல்டுங்கா மாவட்டம் 2 146832
12 கோடாங் மாவட்டம் 2 205225
13 சோலுகும்பு மாவட்டம் 2 105119
14 உதயபூர் மாவட்டம் 4 315429

[8]

மாநில எண் 2ன் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

எட்டு மாவட்டங்களை கொண்ட மாநில எண் 2 சட்டமன்றத்திற்கு நேரடித் தேர்தலில் 64 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 64 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.[7]:7மேலும் 43 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்

# மாவட்டங்கள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 சப்தரி மாவட்டம் 8
2 சிராஹா மாவட்டம் 8
3 தனுஷா மாவட்டம் 8
4 மகோத்தரி மாவட்டம் 8
5 சர்லாஹி மாவட்டம் 8
6 ரவுதஹட் மாவட்டம் 8
7 பாரா மாவட்டம் 8
8 பர்சா மாவட்டம் 8

[9]

மாநில எண் 3ன் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

13 மாவட்டங்களைக் கொண்ட மாநில எண் 3 வாக்காளர்களால் நேரடித் தேர்தல் மூலம் 66 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மேலும் 44 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்

# மாவட்டங்கள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 சிந்துலி மாவட்டம் 4
2 ராமேச்சாப் மாவட்டம் 2
3 தோலகா மாவட்டம் 2
4 சிந்துபால்சோக் மாவட்டம் 4
5 காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் 4
6 லலித்பூர் மாவட்டம் 6
7 பக்தபூர் மாவட்டம் 4
8 காத்மாண்டு மாவட்டம் 20
9 நுவாகோட் மாவட்டம் 4
10 ரசுவா மாவட்டம் 2
11 தாதிங் மாவட்டம் 4
12 மக்வான்பூர் மாவட்டம் 4
13 சித்வன் மாவட்டம் 4

[10]

மாநில எண் 4 - சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

10 மாவட்டங்கள் கொண்ட மாநில எண் 4, நேரடித் தேர்தல் முறையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 36 தொகுதிகள் கொண்டது. மேலும் 21 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்

# மாவட்டங்கள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 கோர்க்கா மாவட்டம் 4
2 லம்ஜுங் மாவட்டம் 2
3 தனஹு மாவட்டம் 4
4 சியாங்ஜா மாவட்டம் 4
5 காஸ்கி மாவட்டம் 6
6 மனாங் மாவட்டம் 2
7 முஸ்தாங் மாவட்டம் 2
8 பர்பத் மாவட்டம் 2
9 மியாக்தி மாவட்டம் 2
10 பாகலுங் மாவட்டம் 4
11 நவல்பராசி மாவட்டம் 4

[11]

மாநில எண் 5 - சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

12 மாவட்டங்கள் கொண்ட மாநில எண் 5, நேரடித் தேர்தல் முறையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 52 தொகுதிகள் கொண்டுள்ளது. மேலும் 39 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்

# மாவட்டங்கள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 குல்மி மாவட்டம் 4
2 பால்பா மாவட்டம் 4
3 ரூபந்தேஹி மாவட்டம் 10
4 அர்காகாஞ்சி மாவட்டம் 2
5 கபிலவஸ்து மாவட்டம் 6
6 பியுட்டான் மாவட்டம் 2
7 ரோல்பா மாவட்டம் 2
8 தாங் மாவட்டம் 6
9 பர்தியா மாவட்டம் 4
10 பாங்கே மாவட்டம் 6
11 நவல்பராசி மாவட்டம் 4
12 ருக்கும் கிழக்கு 2

[12]

கர்ணாலி பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

10 மாவட்டங்களைக் கொண்ட கர்ணாலி பிரதேச சட்டமன்றம், நேரடித் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 24 தொகுதிகள் கொண்டுள்ளது. மேலும் 15 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

# மாவட்டஙக்ள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள்தொகை
1 சல்யான் மாவட்டம் 2
2 சுர்கேத் மாவட்டம் 4
3 தைலேக் மாவட்டம் 4
4 ஜாஜர்கோட் மாவட்டம் 2
5 டோல்பா மாவட்டம் 2
6 ஹும்லா மாவட்டம் |2
7 காளிகோட் மாவட்டம் 2
8 முகு மாவட்டம் 2
9 ஹும்லா மாவட்டம் 2
10 ருக்கும் மேற்கு 2

[13]

மாநில எண் 7 - சட்டமன்றம்[தொகு]

ஒன்பது மாவட்டங்களைக் கொண்ட மாநில எண் 7 சட்டமன்றத்திற்கு 32 உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க 32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.மேலும் 21 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

# மாவட்டங்கள் சட்டமன்றத் தொகுதிகள் மக்கள் தொகை
1 பாசூரா மாவட்டம் 2
2 பஜாங் மாவட்டம் 2
3 அச்சாம் மாவட்டம் 4
4 டோட்டி மாவட்டம் 2
5 கைலாலீ மாவட்டம் 10
6 கஞ்சன்பூர் மாவட்டம் 6
7 டடேல்துரா மாவட்டம் 2
8 பைத்தடி மாவட்டம் 2
9 தார்ச்சுலா மாவட்டம் 2

[14]

நேபாள மாநிலங்களின் முதலாவது சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]

ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான முதலாவது பொதுத் தேர்தல் 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் கூட்டணி கட்சிகள் மாநில எண் 1 சட்டமன்றத்தில் தவிர மற்ற ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளில்பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைந்தனர். நேபாளி காங்கிரஸ் அனைத்து ஏழு சட்டமன்றங்களிலும் எதிர்கட்சி தகுதியைப் பெற்றது. தேர்தல் முடிவுகளின் படி,புதிய சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. குடியரசுத் தலைவரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற அவைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CA approves ceremonial prez, bicameral legislature". Kanptipur Media Group. 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017. Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected."
  2. State Legislature - பக்கம் 119
  3. "Infra for provincial assemblies: Govt preparation far from satisfactory". Kantipur Media Group. 15 September 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017. There will be 550 members in all seven provinces after the elections, with Province 3 having the highest number of members (110). Province 7 will have the lowest number of members of 53.
  4. "NEPAL: Diluted proportional electoral system". scoop.co.nz. Scoop world. 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  5. Nepal Elections 2017
  6. "Election programme announced for HoR and Provincial Assembly". corporatenepal.com. 12 September 2017. Archived from the original on 8 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 "EDITORIAL: Important step". The Himalayan Times. 1 September 2017. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.
  8. "Province level result, Province-1". election.ekantipur.com. Kantipur Media Group. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  9. "Province No. 2". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  10. "Province No. 3". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  11. "Province No. 4". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  12. "Province No. 5". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  13. "Province No. 6". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  14. "Province No. 7". election.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநில_சட்டமன்றம்&oldid=3575487" இலிருந்து மீள்விக்கப்பட்டது