வீரகஞ்ச்

ஆள்கூறுகள்: 27°0′N 84°52′E / 27.000°N 84.867°E / 27.000; 84.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரகுஞ்ச்
बीरगंज
பெருநகரம்
நேபாள-இந்திய எல்லையில் அமைந்த வீரகுஞ்ச் மாநகரம்
நேபாள-இந்திய எல்லையில் அமைந்த வீரகுஞ்ச் மாநகரம்
அடைபெயர்(கள்): நேபாளத்தின் நுழைவாயில்
வீரகுஞ்ச் is located in நேபாளம்
வீரகுஞ்ச்
வீரகுஞ்ச்
நேபாளத்தில் வீரகுஞ்ச் மாநகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°0′N 84°52′E / 27.000°N 84.867°E / 27.000; 84.867
நாடு நேபாளம்
மாநிலம்நேபாள மாநில எண் 2
மாவட்டம்பர்சா
மாநகராட்சி2017
அரசு
 • வகைமேயர்-மாமன்றக் குழு
 • மேயர்விஜய் சரவாகி
 • துணை மேயர்சாந்தி கார்க்கி
பரப்பளவு
 • மொத்தம்75.24 km2 (29.05 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்204,816
 • அடர்த்தி2,700/km2 (7,100/sq mi)
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்44300, 44301
தொலைபேசி குறியீடு051
இணையதளம்birgunjmun.gov.np

வீரகஞ்ச் (ஆங்கிலம்: BirgunjJ) (நேபாள மொழி: बीरगंज), நேபாளத்தின், நேபாள மாநில எண் 2 இல் உள்ள நாராயணி மண்டலத்தின், காத்மாண்டு சமவெளியின் பர்சா மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடமும், பெருநகர் மாநகராட்சியாகும். நேபாளத்தின் தெற்கு நுழைவு வாயிலாக வீரகுஞ்ச் மாநகரம் உள்ளது. வீரகுஞ்ச் நகரம், நேபாளத்தின் வணிக-பொருளாதாரத்திற்கான மையமாக திகழ்கிறது.

அமைவிடம்[தொகு]

இந்திய-நேபாள எல்லைப்புறத்தில் அமைந்த வீரகுஞ்ச் மாநகரம், நேபாளத் தேசிய தலைநகரம் காத்மாண்டுவிற்கு தெற்கில் 135 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் அமைந்த ரக்சல் நகரம் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

ராணா வம்சத்தின் மன்னர் ஜங் பகதூர் ராணா வீரகுஞ்ச் நகரத்தை 1897ல் நிறுவினார். 21 மே 2017 முடிய நகராட்சியாக இருந்த வீரகுஞ்ச் நகரம், 22 மே 2017 அன்று பெருநகர மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது. 27 செப்டம்பர் 2017 அன்று நடைபெற்ற நேபாள உள்ளாட்சித் தேர்தல்களில், வீரகுஞ்ச் பெருநகர மாநகராட்சி தேர்தலில், மேயராக விஜய்குமார் சராகியும், துணைமேயராக சாந்தி கார்க்கியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 நேபாள மக்கள் தொக கணக்கெடுப்பின் வீரகுஞ்ச் மாநகரத்தின் மக்கள் தொகை 2,07,980 ஆகும்.[3]வீரகுஞ்ச் பெருநகரம், தராய் மற்றும் நாராயணி மண்டலத்தில் பெரிய நகரமாகும். மேலும் நேபாளத்தின் ஏழு பெருநகரங்களில் வீரகுஞ்ச் நகரம் நான்காம் இடம் வகிக்கிறது. வீரகுஞ்ச் நகரம், பர்சா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். வீரகுஞ்ச் நகரத்தில், நேபாளத்தின் அலுவல் மொழியாக நேபாளி மொழியும் மற்றும் மைதிலி மொழி, இந்தி, ஆங்கிலம், போஜ்புரி மொழிகளும் பேசப்படுகிறது.

வரலாறு[தொகு]

மத்தியகால வரலாறு[தொகு]

நேபாள இராச்சியத்தின் ராணா வம்சத்தின் மூன்றாவது பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணா, 1897ல் வீரகஞ்ச் நகரத்தை நிறுவினார்.

நவீன வரலாறு[தொகு]

உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமை படைத்த நேபாள நாட்டை, 18 மே 2006ல் நேபாள அரசு, மதச்சார்பற்ற நாடாக அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து போர்க்கொடி தூக்கினர். நேபாள நாட்டில் பெருங்கலவரம் வெடித்தது. எனவே இந்தியாவிலுருந்து நேபாளத்திற்கு நுழைவு வாயிலாக விளங்கும் வீரகுஞ்ச் எல்லைச் சாவடியை இரண்டு ஆண்டுகளுக்கு மூடி வைத்தனர். [4]

பொருளாதாரம்[தொகு]

நேபாள நாட்டிற்கு தேவையான பெரும்பாலான பொருட்கள், இந்தியாவிலிருந்து வீரகுஞ்ச் நகரத்தின் வழியாக செல்கிறது என்பதால், வீரகுஞ்ச் நகரம் பெரும் வணிக மையமாக திகழ்கிறது. இந்நகரத்தில் வேதியல், பஞ்சாலைகள், கட்டிட மரங்கள், பெட்ரோலியத் தொழிற்சாலைகள் கொண்டது. [5]பரசா மாவட்டத்தின் 56% உற்பத்திப் பொருட்கள் வீரகுஞ்ச் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிகார் மாநிலத்திற்கு ஏற்றுமதியாகிறது. [6]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

வீர்குஞ்ச் தொடருந்து நிலையம், நேபாளத்தின் தேசியத் தலைநகரம் காத்மாண்டையும், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரக்சல் நகரத்தையும் இணைக்கிறது.[7] வீரகுஞ்ச் நகரத்திற்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரக்சல் தொடருந்து நிலையம், நேபாளத்தின் வீரகுஞ்ச் பெருநகரத்தையும், சுகௌலி நகரத்தையும் மற்றும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, தில்லி, பாட்னா, வாரணாசி, அலகாபாத், போபால், அமிர்தசரஸ், கோரக்பூர், ராஞ்சி, நாக்பூர், ஐதராபாத் நகரங்களை நேரடியாக இருப்புப் பாதைகள் மூலம் இணைக்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

வீரகுஞ்ச் நகரத்தின் வடக்கில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிமரா வானூர்தி நிலையம், தலைநகரம் காட்மாண்டு மற்றும் பாட்னாவிற்கு விமான சேவைகள் வழங்கி வருகிறது. தற்போது வீரகுஞ்ச் பெருநகரத்தில் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

பேருந்துகள்[தொகு]

நேபாள்வீரகுஞ்ச் பேருந்து நிலையத்திலிருந்து காத்மாண்டு, பொக்காரா, பரத்பூர், பதான், பக்தப்பூர், விராட்நகர் நேபாள்கஞ்ச், ஜனக்பூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

குதிரை வண்டி[தொகு]

வீரகுஞ்ச் பெருநகரத்தில் வாழும் மாதேசி மக்களின் பயண வண்டியாக குதிரை பூட்டிய வண்டியை பயன்படுத்துகின்றனர். சகோதர நகரமான பிகாரின் ரக்சல் - வீரகுஞ்ச் இடையே போக்குவரத்திற்கு குதிரை வண்டிகள் பயன்படுகிறது. .

சரக்கு போக்குவரத்து[தொகு]

2005ம் ஆண்டு முதல், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரக்சல் நகரத்திலிருந்து, நேபாளத்தின் வீரகுஞ்ச் நகரத்திற்கு இடையே அமைந்த அகலப் பாதை இருப்புப் பாதைகள் மூலம், பெரும் அளவிலான சரக்குப் போக்குவரத்துகள் நடைபெறுகிறது. நேபாளம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள், இந்திய துறைமுகங்களில் இறக்கப்பட்டு, பின்னர் இந்திய இரயில்வேயின் சரக்குத் தொடருந்துகள் மூலம் நேபாளத்தின் வறண்ட துறைமுகம் எனப் பெயர் பெற்ற வீர்கஞ்ச் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின் அங்கிருந்து நேபாளத்தின் அனைத்து இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  • காதிமாய் கோயில்
  • பார்சா காட்டுயிர் காப்பகம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ABOUT BIRGUNJ". www.cgibirgunj.org. Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
  2. "FSF-N wins mayor and NC deputy mayor in Birgunj" (in en-US). The Himalayan Times. 2017-09-27. https://thehimalayantimes.com/nepal/federal-socialist-forum-nepal-wins-mayor-nepali-congress-deputy-mayor-birgunj-metropolitan-city/. 
  3. "Nepal population statistics". Archived from the original on 2015-07-04.
  4. Nepal's Hindu majority is denouncing the recent move to end Nepal's longtime status as the world's only Hindu state. The Christian Science Monitor
  5. "Birgunj: Nepal's 'drug capital'". english.aljazeera.net.
  6. CPS, NEPAL 2013, Annual UN Report Bureau.
  7. "Transport in Nepal". nepal.saarctourism.org. Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகஞ்ச்&oldid=3588197" இலிருந்து மீள்விக்கப்பட்டது