உள்ளடக்கத்துக்குச் செல்

பர்சா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளம் நாட்டின் மாதேஷ் மாநிலத்தில் பர்சா மாவட்டத்தின் அமைவிடம்
இந்திய-நேபாள எல்லையில் பீர்கஞ்ச் நகரத்தின் நுழைவாயில்

பர்சா மாவட்டம் (Parsa District) (நேபாளி: पर्सा जिल्लाகேட்க, நேபாளத்தின் தெராய் சமவெளியில் உள்ள மாதேஷ் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீர்கஞ்ச் நகரம் ஆகும்.

பர்சா மாவட்டத்தின் பரப்பளவு 1,353 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,01,017 ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (44%), நேபாள மொழி (45%), உருது மொழி (1%) மற்றும் பிற மொழிகள் (1%) பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,300 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [1]

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

[தொகு]
பர்சா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

பர்சா மாவட்டத்தில் எண்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், பீர்கஞ்ச் எனும் நகராட்சியும் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

27°0′N 84°52′E / 27.000°N 84.867°E / 27.000; 84.867


"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சா_மாவட்டம்&oldid=4372308" இலிருந்து மீள்விக்கப்பட்டது