நேபாள மாநில எண் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாநில எண் 2
மாநிலம்
Ram Janaki Temple, Dhanusha.jpg
Kankalini Temple 5983.jpg Shankharacharya Gate, Birgunj.jpg
Chinnamasta Temple Rajbiraj Saptari NPSAP01 (13).jpg
Gadhimai temple.jpg
மேலிருந்து கடிகாரச் சுற்றில்:
ஜானகி கோயில், கங்காலினி கோயில், வீரகுஞ்ச், சின்னமஸ்தா கோயில் மற்றும் காதிமாய் கோயில்
நேபாளத்தில் மாநிலம் 2ன் அமைவிடம் (மஞ்சள் நிறத்தில்)
நேபாளத்தில் மாநிலம் 2ன் அமைவிடம் (மஞ்சள் நிறத்தில்)
நாடு நேபாளம்
தலைநகரம்ஜனக்பூர்
முக்கிய நகரங்கள்ஜனக்பூர், வீரகுஞ்ச், ராஜ்பிராஜ், ஜித்பூர் சிமாரா, பர்பிபாஸ் மற்றும் லகான்
மாநகராட்சிகள்வீரகுஞ்ச் மற்றும் ஜனக்பூர்
அரசு
 • Bodyமாநில அரசு எண் 2
 • ஆளுநர்இரத்னேஸ்வர் லால் காயஸ்தா [1]
 • முதலமைச்சர்முகமது லால் பாபு ரவுத் கத்தி (சோசலிச கூட்டமைப்பு முன்னணி (Federal Socialist Forum, Nepal)
 • உறுப்பினர்கள்
 • மாநில சட்டமன்றம்
 • தேர்தல் தொகுதிகள்
பரப்பளவு
 • மொத்தம்9,661 km2 (3,730 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,404,145
 • அடர்த்தி560/km2 (1,400/sq mi)
இனங்கள்மதேசிக்கள்
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
நேபாள மொழிகள்மைதிலி, போஜ்புரி மற்றும் நேபாளி
பிற மொழிகள்தாரு மொழி, இந்தி, பஜ்ஜிகா, உருது

மாநில எண் 2 (Province No. 2), நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். இது நேபாளத்தின் தென்கிழக்கில் தராய் சமவெளியில் உள்ளது.

இம்மாநிலம், 2015 அரசியல் அமைப்பு சட்டப்படி 20 செப்டம்பர் 2015 அன்று நிறுவப்பட்டது.[4]

17 சனவரி 2018ல் கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனக்பூர் நகரம் இம்மாநிலத்தின் இடைக்காலத் தலநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.[5]

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், நேபாளத்தில் இரண்டாவதாக உள்ளது.[6]மேலும் பரப்பளவில், சிறிய மாநிலமாகும்.

எல்லைகள்[தொகு]

இம்மாநிலத்தின் கிழக்கிலும், வடக்கிலும் மாநில எண் 1 மற்றும் வடக்கிலும், மேற்கிலும் மாநில எண் 3 எல்லைகளாக உள்ளது. மேலும் தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்துடன் பன்னாட்டு எல்லைகள் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

9661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 5,404,145 ஆகும். [7]இம்மாநிலத்தின் மக்கள் மைதிலி மொழி, போஜ்புரி மொழி, இந்தி மொழி, நேபாளி மொழிகளை பேசுகின்றனர்.

அரசியல்[தொகு]

இம்மாநில சட்டமன்றத்தின் 107 உறுப்பினர்களுக்கான, தேர்தலில், 64 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 43 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும்; நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 32 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

மாநில எண் 2ன் சட்டமன்றத் தேர்தல் 2017 முடிவுகள்[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 8 370,550 24.11 11 19
ராஷ்டிரிய ஜனதா கட்சி 15 318,524 20.72 10 25
நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி 20 284,072 18.48 9 29
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 14 249,734 16.25 7 21
மாவோயிஸ்ட் 6 182,619 11.88 5 11
நேபாள சாங்கியா சமாஜ்வாடி கட்சி 0 32,864 2.14 1 1
பிறர் 0 98,808 6.42 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 64 1,537,171 100 43 107
Source: Election Commission of Nepal

அரசாங்கம்[தொகு]

மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி தலைமையிலான கூட்டணி அரசு அமைச்சரவை அமைத்தது. இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி கட்சியின் முகமது லால் பாபு ரவுத் கத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]

நிர்வாகம்[தொகு]

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக எட்டு மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

# பெயர் நேபாளி மொழியில் தலைமையிடம் மக்கள் தொகை (2011) பரப்பளவு இணையத்தளம்
1 பாரா மாவட்டம் बारा जिल्ला கலையா 687,708 1,190 km² [1]
2 தனுஷா மாவட்டம் धनुषा जिल्ला ஜனக்பூர் 754,777 1,180 km² [2]
3 மகோத்தரி மாவட்டம் महोत्तरी जिल्ला ஜலேஷ்வர் 627,580 1,002 km² [3]
4 பர்சா மாவட்டம் पर्सा जिल्ला வீரகுஞ்ச் 601,017 1,353 km² [4]
5 ரவுதஹட் மாவட்டம் रौतहट जिल्ला கௌர் 686,722 1,126 km² [5]
6 சப்தரி மாவட்டம் सप्तरी जिल्ला ராஜ்பிராஜ் 639,284 1,363 km² [6]
7 சர்லாஹி மாவட்டம் सर्लाही जिल्ला மலாங்வா 769,729 1,259 km² [7]
8 சிராஹா மாவட்டம் सिराहा जिल्ला சிராஹா 637,328 1,188 km² [8]

மாவட்டங்கள் மாநகராட்சி]களாகவும், துணை மாநகராட்சிகளாகவும், நகர்புற நகராட்சிகளாகவும், கிராம்ப்புற நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.Circle frame.svg

மாநில எண் 2-இல் சமயங்கள்

  பிறர் (0.44%)
Circle frame.svg

மொழிகள்

  மைதிலி (45.30%)
  நேபாளி (6.67%)
  உருது (5.87%)
  தாரு (3.77%)
  மகதி (0.57%)
  இந்தி (0.16%)
  பிற மொழிகள் (4.44%)

புவியியல்[தொகு]

நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தின் கிழக்கில் கோசி ஆறும் மற்றும் பாக்மதி ஆறு, கமலா ஆறு, லக்கந்தேய் ஆறு, விஷ்ணமதி ஆறுகளும் பாய்கிறது.

போக்குவரத்து[தொகு]

மலைகள் அற்ற சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் நன்குள்ளது.

சாலைகள்[தொகு]

மகேந்திரா நெடுஞ்சாலை இம்மாநிலத்தில் கிடைமட்டத்தில் செல்வதால், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியின் நகரங்கள், இம்மாநிலத்தின் வீரகுஞ்ச் மற்றும் ஜனக்பூர் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [10] திரிபுவன் நெடுஞ்சாலை இம்மாநிலத்தின் வழியாக நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்தையும் மற்றும் இந்திய நகரங்களையும் இணைக்கிறது. [11]

வானூர்தி நிலையங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநில_எண்_2&oldid=3095528" இருந்து மீள்விக்கப்பட்டது