பைத்தடி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூர மேற்கு நேபாளத்தின் மாநில எண் 1-இல் உள்ள பைத்தடி மாவட்டத்தின் அமைவிடம்

பைத்தடி மாவட்டம் (Baitadi District) (நேபாளி: बैतडी जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen), தூர மேற்கு நேபாளத்தின் நேபாள மாநில எண் 7-இல் அமைந்த ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தசரதசந்த் (Dasharathchand) நகரம் ஆகும்.

இம்மாவட்டம் 1,519 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,50,898 ஆகும். இதில் பெண்கள் 1,33,491 ஆக உள்ளனர். [1]இம்மாவட்டத்தில் குமாவானி மொழி அதிகம் பேசப்படுகிறது. நேபாளத்தின் தூர மேற்கில் அமைந்த பைத்தடி மாவட்டத்தின் மேற்கு பகுதி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாகக் கொண்டுள்ளது.

பைத்தடி மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் 56 கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும் கொண்டது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 13.1%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 71.2%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 15.7%

வேளாண்மை[தொகு]

சோளம், கோதுகை முக்கியப் பயிர்கள் ஆகும். வீட்டுப் பயன்பாட்டிற்கு நெல், தானியங்கள், பழங்கள் பயிரிடப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தடி_மாவட்டம்&oldid=2164391" இருந்து மீள்விக்கப்பட்டது