பரத்பூர், நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத்பூர்
भरतपुर महानगरपालिका
மாநகராட்சி
பரத்பூர் நகரக் காட்சி
பரத்பூர் நகரக் காட்சி
பரத்பூர் is located in நேபாளம்
பரத்பூர்
பரத்பூர்
நேபாளத்தில் பரத்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°41′N 84°26′E / 27.683°N 84.433°E / 27.683; 84.433
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 3
மாவட்டம்சித்வான்
அரசு
 • வகைமேயர்-மாநகராட்சி மன்றக் குழு
 • மேயர்ரேணு தால்
 • துணை மேயர்பார்வதி ஷா
 • செயல் அலுவலர்பிரேம்ராஜ் ஜோஷி
பரப்பளவு
 • மொத்தம்433 km2 (167 sq mi)
ஏற்றம்208 m (682 ft)
மக்கள்தொகை (2015)census
 • மொத்தம்2,80,502
 • அடர்த்தி650/km2 (1,700/sq mi)
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்44200, 44207 (நாராயன்கர்)
தொலைபேசி குறியீடு056
தட்ப வெப்பம் ClimateCwa
இணையதளம்www.bharatpurmun.gov.np

பரத்பூர் (Bharatpur) (நேபாளி: भरतपुर) தென்மத்திய நேபாளத்தில் சித்வன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நேபாளத்தின் நான்காவது பெருநகர மாநகராட்சியும் ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 2,80,502 (census 2015) ஆகும். பரத்பூர், நேபாளத்தின் ஏழு பெருநகர் மாநகராட்சிகளில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

நேபாள மத்திய வளர்ச்சிப் பிராந்தியத்தின், நாராயணி மண்டலத்தில், நேபாள மாநில எண் 3ல் உள்ள, சித்வான் மாவட்டத்தில், நாராயணி ஆற்றின் கரையில் பரத்பூர் நகரம் உள்ளது.

சித்வான் மாவட்டத்திற்கும், நேபாள மத்திய வளர்ச்சி பிராந்தியத்திற்கும், பெரும் வணிக மையமாக அமைந்த பரத்பூர் நகரம், காட்மாண்டு - வீரகுஞ்ச் நகரங்களை இணைக்கும் மகேந்திர நெடுஞ்சாலையின் நடுவில் உள்ளது.

பரத்பூர் நகரம் காத்மாண்டிலிருந்து 146 கிலோ மீட்டர் தொலைவிலும், பொக்காராவிலிருந்து 126 கிலோ மீட்டர் தொலைவிலும், வீரகுஞ்சிலிருந்து 128 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு[தொகு]

2 டிசம்பர், 2014 அன்று பரத்பூர் நகரம், துணை-மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 2011ல் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,03,867 ஆக உயர்ந்தததால், டிசம்பர், 2017ல் பரத்பூர் நகரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புகள்[தொகு]

பரத்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், தேசியத் தலைநகரம் காட்மாண்டு நகரத்துடன் நாள் ஒன்றிற்கு ஏழு முதல் பதினோறு பறப்புகளுடன் கூடியது.

மகேந்திரா நெடுஞ்சாலை, பரத்பூர் நகரை நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

இருபதாயிரம் ஏரிகள்[தொகு]

பரத்பூர் நகரத்தின் தெற்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த இருபதாயிரம் ஏரிகள், சித்வான் தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இவ்வேரி முதலைகள் போன்ற ஊர்வனங்கள் மற்றும் பறவைகளின் சரணாயலமாக உள்ளது.

சித்வான் தேசியப் பூங்கா[தொகு]

நேபாளத்தின் மூன்றாவது சுற்றுலாத் தலமாக விளங்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட சித்வான் தேசியப் பூங்காவின் மொத்தப் பரப்பளவில் 70% மரங்கள், குறிப்பாக சால மரங்கள் மற்றும் பைன் மரங்கள் கொண்டுள்ளது. உலகின் உயரமான புல்வகைகளில் ஆசியா யானைப் புற்கள் (Miscanthus sinensis) இப்பூங்காவில் அதிகம் வளர்கிறது.

சிற்றுயிர்கள் மற்றும் 700 வகையான காட்டுயிர்கள் உள்ளது. மேலும் பதினேழு வகையான பாம்பினங்கள், நட்சத்திர ஆமைகள், உடும்புகள், இத்தேசியப் பூங்கா வழியாக பாயும் நாராயணி-இரப்தி ஆறுகளில் 113 வகையான மீனினங்கள் மற்றும் 235 கரியால் வகை முதலைகள் உள்ளது.

சித்வான் தேசியப் பூங்காவில் 43 வகையான பாலூட்டிகள் உள்ளது. உலகில் அதிக புலிகளைக் கொண்ட தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும். தற்போது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆறு பெண் புலிகளும், இரண்டு ஆண் புலிகளும் உள்ளது. [2] வங்கப் புலிகளுடன், இந்தியச் சிறுத்தைகளும் இப்பூங்காவில் உள்ளது.[3]

சித்வான் தேசியப் பூங்காவில் 200 முதல் 250 வரையிலான சோம்பேறிக் கரடிகள் உள்ளது. மேலும் நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன.[4] சித்வான் தேசியப் பூங்காவில் செந்நாய்கள், தங்க நிற குள்ள நரிகள், மீன்பிடிப் பூனைகள், சிறுத்தைப் பூனைகள், பெரிய மற்றும் சிறிய ஆசிய மரநாய்கள், நண்டை உண்ணும் கீரிகள், மஞ்சள் நிற தொண்டை கீரிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. [5] ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 544 ஆக உயர்ந்துள்ளது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களைக் காக்க, இங்கிருந்து நாட்டின் பிற தேசியப் பூங்காக்களுக்கு, இன வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் சித்வான் தேசியப் பூங்காவில் ஆசியக் காட்டு யானைகள், காட்டெருதுகள் அதிகமாக உள்ளது. [6] காட்டுப்பன்றிகள், கலைமான்கள், குரைக்கும் மான்கள், புள்ளிமான் கூட்டங்கள், புல்வாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மறிமான்கள், செம்முகக் குரங்குகள், அனுமார் குரங்குகள், இந்திய எறும்பு தின்னிகள், இந்திய முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில்கள், பல இன காட்டு முயல்கள் மற்றும் தேவாங்குகள் காணப்படுகின்றன.

இங்கு 543 இன பறவை இனங்களில் மூன்றில் இரண்டு பங்கு பறவைகள் உலக அளவில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளவைகள் ஆகும். அரிய வகை சிட்டுக் குருவிகள், தேன்சிட்டு பறவைகள், பெருந்தலை கிளிகள், கானாங்கோழிகள், காட்டுக் கோழிகள், இந்திய மயில்கள் மற்றும் உலக அளவில் அருகி வரும் புள்ளிக் கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இப்பூங்கா செயல்படுகிறது.

நாராயணி ஆறு[தொகு]

ஹரிஹரன் கோயிலிருந்து நாராயணி ஆறு


நேபாளத்தின் ஆழமான, பெரிய ஆறுகளில் ஒன்றான நாராயணி ஆறு, பரத்பூர் நகரத்தின் மேற்கு பகுதியில் வடக்கு-தெற்காக பாய்கிறது.

ரப்தி ஆறு[தொகு]

கிழக்கிலிருந்து தெற்காக பாயும் ரப்தி ஆறு பரத்பூர் நகரத்தின் தெற்கில் அமைந்துள்ளது. ரப்தி ஆறு சித்வான் தேசியப் பூங்காவின் வடக்கு எல்லையாக ரப்தி ஆறு உள்ளது.

பண்பாட்டுத் தலங்கள்[தொகு]

தேவ்காட் படித்துறை, தின்கோலே பௌத்த விகாரை, கணேசர் கோயில், பாகேஸ்வரி கோயில், அரிஹரன் கோயில், மங்கலேஷ்வர் சிவன் கோயில், காளிகா கோயில், ஜெகதிமாய் கோயில், துர்கை கோயில், ராமேஷ்வர் கோயில் முதலியன் பரத்பூர் நகரத்தில் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

சன் ரைஸ் ஆங்கிலப் பள்ளி, அபெக்ஸ் கல்விக் கழகம், அரோமா ஆங்கில மேனிலைப் பள்ளி, சித்வான் மேனிலைப் பள்ளி, ஹோலி விஷன் பொதுப் பள்ளி, லிட்டில் பிளவர் பள்ளி, நேபாள் மேனிலைப் பள்ளி முதலிய பள்ளிகள் பரத்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

கல்லூரிகள் & பல்கலைகழகங்கள்[தொகு]

வேளாண்மை மற்றும் காட்டுயிர்ப் பல்கலைக்கழகம், பாலகுமாரி கல்லூரி, பரத்பூர் மருத்துவக் கல்லூரி [7], பரத்பூர் விமான ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, சித்வான் மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், சித்வான் ஹோட்டல் பயிற்சி மையம், சித்வான் மருத்துவக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி மையம், சித்வான் அறிவியல் கல்லூரி, கிரிஸ்டல் கல்லூரி, இந்திராணி கல்லூரி, அறிவியல் மற்றும் மேலாண்மைக்கான லீட் அகாதமி, கௌதம புத்தா பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, மையா தேவி மகளிர் கல்லூரி மற்றும் பிரசிடென்சி மேலாண்மை அறிவியல் கல்லூரி போன்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் பரத்பூர் நகரத்தில் உள்ளது. (PCMS)

மருத்துவ மனைகள்[தொகு]

பரத்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அறிவியல் கல்லூரி [7], சித்வான் மருத்துவக் கல்லூரி [8], பரத்பூர் கண் மருத்துவ மனை, பி.பி கொய்லாரா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, [9] மற்றும் நாராயணி சமுதாய மருத்துவமனைகள் பரத்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-14. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
  2. Barlow, A.; McDougal, C.; Smith, J. L. D.; Gurung, B.; Bhatta, S. R.; Kumal, S.; Mahato, B.; Tamang, D. B. (2009). "Temporal Variation in Tiger (Panthera tigris) Populations and its Implications for Monitoring". Journal of Mammalogy 90 (2): 472–478. doi:10.1644/07-mamm-a-415.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2009-04_90_2/page/472. 
  3. McDougal, C (1988). "Leopard and Tiger Interactions at Royal Chitwan National Park, Nepal". Journal of the Bombay Natural History Society 85: 609–610. 
  4. Jnawali, S. R., Baral, H. S., Lee, S., Acharya, K. P., Upadhyay, G. P., Pandey, M., Shrestha, R., Joshi, D., Lamichhane, B. R., Griffiths, J., Khatiwada, A. P., Subedi, N. and Amin, R. (compilers) (2011). The Status of Nepal’s Mammals: The National Red List Series. Department of National Parks and Wildlife Conservation, Kathmandu, Nepal.
  5. Thapa, K.; Kelly, M. J.; Karki, J. B.; Subedi, N. (2013). "First camera trap record of pack hunting dholes in Chitwan National Park, Nepal". Canid Biology & Conservation 16 (2): 4–7. 
  6. WWF News (2008). Gaur Census in Parsa Wildlife Reserve பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம். wildcattleconservation.org
  7. 7.0 7.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
  8. Chitwan Medical College website
  9. "Koirala Memorial Cancer Hospital website". Archived from the original on 2009-04-23. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்பூர்,_நேபாளம்&oldid=3642870" இலிருந்து மீள்விக்கப்பட்டது