கச மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கச/கசியா/குஸ்/பார்பேட்டே/கோர்க்காலி
खस/खसिया/पर्वते/पहाडी/गोर्खाली
மொத்த மக்கள்தொகை
அண். 16 மில்லியன்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
கச மொழி, தோதெலி மொழி, நேபாளி மொழி மற்றும் குசுந்தா மொழி
சமயங்கள்
பெரும்பான்மை இந்து சமயம் மற்றும் பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
குமாவுன் மக்கள், கார்வால் மக்கள், பகாரி மக்கள் மற்றும் மகர் மக்கள்
தேவநாகரி எழுத்தில், பழைய கச மொழியில் எழுதப்பட்ட செப்புப்ப் பட்டயம், காலம் சக ஆண்டு, 1612

கச மக்கள் (Khas people) (நேபாளி: खस) கச ஆரியர் என்றும் அழைப்பர். [nb 1] (நேபாளி: खस ) இம்மக்கள் நேபாளம் மற்றும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டத்தில் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாழும் இந்தோ-ஆரிய இன மக்கள் ஆவர். [12] இம்மக்கள் கச மொழியை பேசுகின்றனர். இம்மக்களை கசியா, குஸ், பார்பேட்டே மற்றும் கோர்க்காலிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர. கச இன மக்கள் பகுன் பிராமணர் மற்றும் கச சத்திரியர் போன்ற சாதிகளில் அடையாளம் காணப்படுகின்றனர். [13][14][15]. 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் மட்டும், நேபாளத்தின் மேற்கு மலைப்பகுதிகளில் வாழும் கச மக்கள், பகூன் மக்கள், சேத்திரி மக்கள், தாக்கூரி மக்கள் மற்றும் சந்நியாசி மக்களை கச ஆரியர்கள் எனக்கருதப்படுவர் எனக்கூறியுள்ளது.[16]இம்மக்கள் கச மொழி, தோதெலி மொழி, நேபாளி மொழி மற்றும் குசுந்தா மொழிக்ளைப் பேசுகின்றனர். இம்மக்களில் பெரும்பான்மையோர் இந்து சமயத்தையும், சிலர் பௌத்ததையும் பின்பற்றுகின்றனர்.

வரலாறு[தொகு]

பண்டைய பரத கண்டத்தின் வடமேற்கில் உள்ள இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்த கசர்கள் குறித்து மகாபாரதம் கூறுகிறது.[17] கச மக்கள் கிமு 1000-இன் துவக்கத்தில், பரத கண்டத்தின் வடமேற்கிலிருந்து, மேற்கு நேபாளத்தில் குடியேறியேதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[18] மத்தியகாலத்தில் நேபாளத்தில் இருந்த கச மல்ல இராச்சியத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார். [17]

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டம் மற்றும் கார்வால் கோட்டத்தில் வாழும் கச பிராமணர்கள் மற்று கச சத்திரியர்கள், பிற பிராமணர்கள் மற்றும் சத்திரியர்களை விட சமூக தரத்தில் குறைந்தவர்களாக கருதப்படுகின்றனர். நேபாளத்தில் கச மல்ல ஆட்சி அதிகாரத்தின் போது, நேபாளத்தின் கச மக்கள் பிராமணர் மற்றும் சத்திரியர்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றனர்.[19]

கிபி 19-ஆம் நூற்றாண்டு வரை நேபாள கோர்க்கா இராச்சியத்தை என்பதற்கு கச தேசம் என்றே அழைக்கப்பட்டது. [20] கச மக்கள் கோர்க்கா இராச்சியத்திற்கு அருகில் வாழ்ந்த நேவார் மக்கள் வாழ்ந்த பகுதிகளை கோர்க்கா இராச்சியத்துடன் இணைத்தனர். அண்மையில் வாழ்ந்த பகுதிகளை கோர்க்க இராச்சியத்துடன் இணைத்தனர். 1854-இல் இயற்றப்பட்ட சட்டத் தொகுப்பின் படி, நேபாளப் பிரதம அமைச்சராக இருந்த ஜங் பகதூர் ராணா தம்மை கச நாட்டைச் சார்ந்தவர் என அறிவித்துக் கொண்டார். [21]

கோர்க்கா இராச்சியத்தை நிறுவிய ஷா வமசத்தவர்களுக்குப் பின் ஆட்சி அதிகாரம் இராண் வம்சத்தவர்களின் வந்த போது, கச மொழியை நேபாள மொழி என அழைக்கப்பட்டது. கச மக்கள் தங்களை, இந்தியாவின் இராஜபுத்திர சத்திரியர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டனர்.[22]

கோர்க்க இராச்சியத்தின் நிர்வாகியும், பிரதம அமைச்சருமான ஜங் பகதூர் ராணா, கச மக்களை ஜாட் எனும் சத்திரிய இனத்தவர் எனப்பெயரிட்டார்.[22]. கங்கைச் சமவெளியிலிருந்து நேபாளத்தின் மலைப்பகுதிகளில் புலம்பெயர்ந்த பிராமணர்களை, கச பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர்.[23] நேபாளத்தில் உயர்குடி பூசாரிகளான பிராமணர்களை பகூன் பிராமணர் என அழைக்கப்பட்டனர். மது குடிக்கும் பிராமணர்களை கச சேத்திரிகள் என அழைக்கப்பட்டனர்.[15]. கச மக்கள் சேத்திரி எனும் பெயரில் அழைக்கப்பட்டதால், கச மக்கள் என்ற பெயர் புழக்கத்தில் படிப்படியாக மறைந்தது [13][15]

கச மக்களில் உட்பிரிவுகள்[தொகு]

நேபாளத்தின் கச மக்கள்

கச மக்களில் பகூன் பிராமணர், சேத்திரி, தாக்கூரி, சந்நியாசி, கார்த்தி, தமாலி, காமி, ச்ர்க்கி, பாடி கந்தர்பால் போன்ற உட்பிரிவுகள் உள்ளது[24] கச மக்கள் உயர்குடியாளர்களாக இருப்பினும், அதன் உட்பிரிவினரான காமி (கொல்லர்), தமாய் (தையல்காரர்), சர்க்கி (செருப்பு தைப்பவர்) பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கச_மக்கள்&oldid=3098537" இருந்து மீள்விக்கப்பட்டது