கணேஷ் மான் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேஷ் மான் சிங்
கணேஷ் மான் சிங்
பிறப்புநவம்பர் 9, 1915
இதும்பாகால், காட்மாண்டு, நேபாளம்
இறப்புசெப்டெம்பர் 18, 1997
சக்சிபாரி, காட்மாண்டு, நேபாளம்
அமைப்பு(கள்)நேபாளி காங்கிரஸ், நேபாள் பிரஜா பரிசத்
அரசியல் இயக்கம்1990 மக்கள் இயக்கம்
வாழ்க்கைத்
துணை
மங்கள தேவி சிங்
லலித்பூரின் ஜவலகேலில் கணேஷ் மான் சிங்கின் சிலை

கணேஷ் மான் சிங் (Ganesh Man Singh)(நேபாளி : गणेशमान सिंह) (நவம்பர் 9, 1915 – செப்டம்பர் 18, 1997) நேபாளத்தில் 1990ஆம் ஆண்டு நேபாள மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்தார்.[1] இவர் ஜனநாயகத்தின் தந்தை என்றும் நேபாள அரசியலின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்படுகிறார்.[2] ராணர்களின் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்து பிரஜா பரிசத்தில் சேர்ந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கணேஷ் மான் சிங் 1915ஆம் ஆண்டு நவம்பர் 9ல்[3] காத்மாண்டுவின் இடும் பகாலில் பிறந்தார். இவரது தந்தை கியான் மான் சிங், தாய் சனுனானி சிரேஸ்தா சிங். இவரது தந்தை இளம் வயதிலேயே இறந்துவிட்டதால், இவரது தாத்தா ரத்னா மான் சிங் (ராணா ஆட்சியில் படகாஜி) இவரை வளர்த்தார்.

இவர் தர்பார் உயர்நிலைப் பள்ளியில் 6வது வகுப்பு வரைப் படித்தார். பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக[4] கல்வியில் தொடர கொல்கத்தா சென்றார். அங்கு வித்யாசாகர் கல்லூரியில் முதல் பிரிவில் சேர்ந்து மெட்ரிக் கல்வியினை முடித்தார். ஐ.எஸ்.சி (இடைநிலை அறிவியல்) வரை படித்த அவர் பின்னர் 1938ல் நேபாளத்திற்குத் திரும்பினார்.[சான்று தேவை]

நேபாளி காங்கிரஸ் தலைவர்[தொகு]

காத்மாண்டுவின் டி.யு போதனா மருத்துவமனையில் கணேஷ் மான் சிங் பவன் முன் கணேஷ் மான் சிங்யின் சிலை
காத்மாண்டுவின் டி யு போதனா மருத்துவமனையில் கணேஷ் மான் சிங் கட்டிடம். இந்த கட்டிடத்தில் மருத்துவமனையின் குழந்தை மருத்துவத்துறை உள்ளது.

பி. எஸ். 2007ஆம் ஆண்டு நேபாள காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கணேஷ் மான் சிங் இருந்தார். இந்த இயக்கத்தால் ராணா ஆட்சி அகற்றப்பட்டது. பி. எஸ். 2015ஆம் ஆண்டில், காத்மாண்டுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அமைச்சரவை அமைச்சரானார். இவர் நேபாளி காங்கிரஸின் தலைவரானார்.[சான்று தேவை]

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை[தொகு]

பி. எஸ். 1997ல் நேபாளத்தின் முதல் அரசியல் கட்சியான பிரஜா பரிசத்தில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். மங்கள தேவி சிங் என்பவருடன் இவருக்குத் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, ராணாவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகப் புரட்சியை நடத்தியதற்காக இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையிலிருந்து தப்பிய இவர் கிருஷ்ண பகதூர் பிரதான் என்ற பெயரில் ராணர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தார். [5]

பிற்கால வாழ்வு[தொகு]

1960 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சுந்தரிஜால் இராணுவ தடுப்பு முகாமில் எட்டு ஆண்டுகளுக்கு விசாரணையின்றி கைது செய்து காவலிருந்தார். [6]

மனித உரிமைக்கான இவரின் சிறந்த பங்களிப்பை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை இவருக்கு 1993ல் “மனித உரிமைகள் விருது” வழங்கி கெளரவித்தது. தெற்காசியாவிலிருந்து முதல் முதலாக இந்த மதிப்பிற்குரிய விருதினை முதன்முதலில் பெற்றவர் இவராவார்.[சான்று தேவை]

நேபாளத்திலும் உலகிலும் அமைதிக்கான பங்களிப்பு மற்றும் அவரது தலைமைப் பண்பு ஆகியவற்றிற்காக 1990ஆம் ஆண்டில் "அய்க்கிய நாடுகளின் அமைதி மற்றும் ஓட்ட பரிசு" வழங்கப்பட்டது. இவர் "யு தாந்த் அமைதி விருது"யால் பெருமைபெறுகிறார்.[சான்று தேவை]

கணேஷ் மான் சிங் அறக்கட்டளை[தொகு]

கணேஷ் மான் சிங் அறக்கட்டளை அவரது மகனான பிரகாஷ் மான் சிங்கின் தலைமையில் நிறுவப்பட்டது. [7]

கணேஷ் மான் சிங்கின் பங்களிப்புகள்[தொகு]

சிங் நேபாளத்திற்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். பி. எஸ் 2007ல் ராணா எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராகவும், நேபாளி காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். இவர் மக்கள் இயக்கம்-1ன் (2046 பிஎஸ்) தளபதியாக இருந்தார். கணேஷ் மான் சிங்கின் தொடர்ச்சியான முயற்சியால் நேபாளத்தில் பல கட்சி ஜனநாயகம் தொடர வழிவகுத்தது.

பி. எஸ் 2054 ஆண்டு அஸ்வின் 2 ஆம் தேதி காத்மாண்டுவில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.britannica.com/biography/Ganesh-Man-Singh
  2. Ghimire, Him Lal (November 11, 2014). "The Iron Man". http://kathmandupost.ekantipur.com/printedition/news/2014-11-10/the-iron-man.html. 
  3. Letter to "Mission Pemanente, Du Royamu Du Nepal, Aupres de l'office des Nations Unies, Geneve" by Nepalese Ambassador, Jayaraj Acharya, nominating Ganesh Man Singh for Human Right Award, Page 62, श्रद्धांजली
  4. वीर गणेशमान सिंह स्मारिका, Page 1
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180707095723/http://www.panakhabar.com/2016/09/17097/. 
  6. "Picture of Sundarijal Military Detention Camp" இம் மூலத்தில் இருந்து 2002-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020802063058/http://www.nepalicongress.org.np/bpkoirala/sundarijal/sundarijal.html. 
  7. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2015-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108204957/http://ganeshmanfoundation.org/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_மான்_சிங்&oldid=3547698" இருந்து மீள்விக்கப்பட்டது