உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலம்
प्रदेश
Pradesh
வகைநேபாள மாநிலங்கள்
அமைவிடம்நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
உருவாக்கப்பட்டது20 செப்டம்பர் 2015
எண்ணிக்கை7
அரசுஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்றம்
உட்பிரிவுகள்மாவட்டங்கள்

நேபாள மாநிலங்கள் ( Provinces of Nepal) (நேபாளி: प्रदेश Pradesh) 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, 77 நேபாள மாவட்டங்களைக் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்கள் மற்றும் 14 மண்டலங்களின் நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.

அரசியல்

[தொகு]

அரசாங்கம்

[தொகு]

நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார்.

மாநில சட்டமன்றங்கள்

[தொகு]

நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது.[1] இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும்.

நேபாள மாநில சட்டமன்றங்கள் 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.[2]

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது.

நேபாள மாநிலங்கள்

[தொகு]
# மாநிலம் தலைநகரம் ஆளுநர் முதலமைச்சர் மாவட்டங்கள் பரப்பளவு
(KM²)
மக்கள்தொகை
(2011)
அடர்த்தி
(people/KM²)
1கோசி மாநிலம்விராட்நகர்டாக்டர். கோவிந்த சுப்பாசெர் தான் ராய்1425,905 KM²4,534,943175
2மாதேஷ் மாநிலம்ஜனக்பூர்ரத்தினேஸ்வர் லால் ரவுத்முகமது லால்பாபு ரவுத்89,661 KM²5,404,145559
3பாக்மதி மாநிலம்ஹெடௌதா அனுராதா கொய்ராலாதோர்மணி பௌதேல்1320,300 KM²5,529,452272
4கண்டகி மாநிலம்பொக்காராபாபுராம் குன்வர்பிரிதிவி சுப்பா குரூங்1121,504 KM²2,413,907112
5லும்பினி மாநிலம்பூத்வல்உமாகாந்த ஜாசங்கர் பொக்காரேல்1222,288 KM²4,891,025219
6கர்ணாலி மாநிலம்விரேந்திரநகர்துர்கா கேசர் கனால்மகேந்திர பகதூர் ஷா1027,984 KM²1,168,51541
7தூர மேற்கு மாநிலம்தங்கடிமோகன்ராஜ் மல்லாதிரிலோசன பட்டா919,539 KM²2,552,517130
மொத்தம் நேபாளம் காட்மாண்டு குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சர் 77 147,181 KM² 26,494,504 180

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CA approves ceremonial prez, bicameral legislature". Kanptipur Media Group. 16 September 2015. Retrieved 8 December 2017. Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected."
  2. "NEPAL: Diluted proportional electoral system". scoop.co.nz. Scoop world. 16 October 2017. Retrieved 8 December 2017.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநிலங்கள்&oldid=4372356" இலிருந்து மீள்விக்கப்பட்டது