ஒகல்டுங்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு நேபாளத்தில் ஒகல்டுங்கா மாவட்டத்தின் அமைவிடம்
Okhaldunga name originated from this big old Mortar/Okhal in Nepali

ஒகல்டுங்கா மாவட்டம் (Okhaldhunga District) (நேபாளி: ओखलढुङ्गा जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), தெற்காசியாவின் நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 1-இல் உள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஒகல்டுங்கா நகரம் ஆகும்.

இமயமலையில் சாகர்மாதா மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 1,074.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,47,984 ஆக உள்ளது.[1]

ஒகல்டுங்கா கிராதர்கள் எனப்படும் இராய் மற்றும் சுனுவார் இன மலைவாழ் மக்களின் வாழ்விடமாகும். இம்மக்களுடன் பிற மலைவாழ் மக்களும், சாதியினரும் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். நேபாள மொழியுடன், வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. மலையேற்ற வீரர்களுக்குரிய சுற்றுலாத் தலமாக இம்மாவட்டம் விளங்குகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

கிஜ்ஜி தோலதமா

ஒகல்டுங்கா மாவட்டம் இமயமலையில் ஆயிரம் அடி முதல் 13,100 அடி உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை, மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என நான்கு நிலைகளில் காணப்படுகிறது.[2]

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

ஒகல்டுங்கா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு நாற்பத்தி ஒன்பது கிராம வளர்ச்சி மன்றங்களும், சித்திசரண் எனும் ஒரு நகராட்சி மன்றமும் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூற்று: 27°19′N 86°30′E / 27.317°N 86.500°E / 27.317; 86.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகல்டுங்கா_மாவட்டம்&oldid=2610031" இருந்து மீள்விக்கப்பட்டது