குல்மி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாளத்தின், மாநில எண் 5-இல் அமைந்த குல்மி மாவட்டம்

குல்மி மாவட்டம் (Gulmi District) (நேபாளி: गुल्मी जिल्लाAbout this soundListen ), நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தில் மாநில எண் 5-இல் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாம்காஸ் நகரம் ஆகும். இம்மாவட்டம் லும்பினி மண்டலத்தில் உள்ளது.

குல்மி மாவட்டம் 1,149 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குல்மி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,80,160 ஆகும். நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது. [1]

அறிமுகம்[தொகு]

குல்மி மாவட்டம் காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. ரித்தி வணிக வளாகத்தில் பல கோயில்கள் உள்ளது.

குல்மி மாவட்டத்தில் எழுபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களும், தாம்காஸ் என்ற ஒரு நகராட்சியும் உள்ளது. இயற்கை வளங்களுங்களுடன் கூடிய சுற்றுலாவுக்கு புகழ் பெற்றது.

தகவல் தொடர்பு[தொகு]

இம்மாவட்டத்தில் 76 அஞ்சல் நிலையங்களும், ஒரு மாவட்ட அஞ்சல் நிலையமும், பதினான்கு காவல் நிலையங்களும் உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளத்தின் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
23.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
71.9%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்
4.6%

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூறுகள்: 28°4′N 83°15′E / 28.067°N 83.250°E / 28.067; 83.250

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்மி_மாவட்டம்&oldid=2164303" இருந்து மீள்விக்கப்பட்டது