உள்ளடக்கத்துக்குச் செல்

சீன நேபாளப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன-நேபாளப் போர்
நாள் 1788-1789
இடம் திபெத்
நேபாளிகளுக்கு வெற்றி, திபெத் ஆண்டுதோறும், நேபாள அரசுக்கு திறை செலுத்தியது.[1]
பிரிவினர்
சீனா, திபெத் நேபாள இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
8வது தலாய் லாமா ராணா பகதூர் ஷா
பலம்
10,000 10,000
இழப்புகள்
தகவல் இல்லை தகவல் இல்லை
கோர்க்காலிகளுக்கு எதிரான இரண்டாவது தாக்குதல்
நாள் 1791 - 1792
இடம் திபெத், நேபாளம்
சிங் பேரரசிற்கு வெற்றி, பெத்திராவதி உடன்படிக்கையின் படி, நேபாளிகள் சிங் பேரரசிற்கு திறை செலுத்தினர்.
பிரிவினர்
சீனா, திபெத் நேபாள இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
சிங் பேரரசர்
புக்காங்கன்
ராணா பகதூர் ஷா
தாமோதர பாண்டே
பலம்
70,000 20,000 - 30,000
இழப்புகள்
தகவல் இல்லை தகவல் இல்லை
தாமோதர பாண்டே, நேபாளப் படைத்தலைவர்

சீன நேபாளப் போர் அல்லது சீன கோர்க்காப் போர் ( Sino-Nepalese War - Sino-Gorkha war) (சீனம்: 廓爾喀之役, நேபாளி: नेपाल-चीन युद्ध) நேபாளப் படைகள் 1788-1789 மற்றும் 1791-1792 ஆண்டுகளில் இரண்டு முறை திபெத்தியப் பேரரசை கைப்பற்றுவதற்காக நடந்த போராகும்.

போரின் காரணங்கள்

[தொகு]

நெடுங்காலமாக திபெத்தியப் பேரரசுக்காக, நேபாள இராச்சியத்தினர், தரம் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை உற்பத்தி செய்து வழங்கியதால் ஏற்பட்ட வணிகப் பிணக்கு முற்றியது. இதனால் கோபமுற்ற திபெத்தியர்கள், திபெத்தின் தலைநகரான லாசாவில் நேபாள வணிகர்களின் வணிகப் பொருட்களை கொள்ளையடித்தனர்.

எனவே நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவின் படைகள் திபெத்தின் மீது படையெடுத்தார். கெரூங் உடன்படிக்கையின் படி, திபெத்தியர்கள் ஆண்டுதோறும், நேபாள அரசுக்கு திறை செலுத்த வேண்டியதாயிற்று.

சிறிது காலம் கழித்து, இப்பிணக்கில் தலையிட்டு தீர்த்து வைக்க, திபெத்திற்கு அருகில் ஆட்சி செய்த சீன சிங் பேரரசிடம் திபெத்திய அரசு முறையிட்டது. அதன் படி, சிங் பேரரசின் படைத்தலைவர் புக்காங்கன் தலைமையிலான சீன - திபெத்திய படைகள், நேபாளப் படைகளை நூவா கோட் வரை துரத்தியடித்தது. பின்னர் பெத்திராவதி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர், சீனர்களுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்த வேண்டியதாயிற்று.[1]

போர் உடன்படிக்கை

[தொகு]

நேபாள இராச்சியம், திபெத்தியப் பேரரசு மற்றும் சிங் பேரரசிற்கு இடையே 2 அக்டோபர் 1792ல், பெத்திராவதி எனுமிடத்தில் போர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[2] போர் உடன்படிக்கையின் விவரங்கள்:

  1. நேபாளம் மற்றும் திபெத் நாடுகள் சிங் பேரரசின் மேலாண்மையை ஏற்று கொள்ளவேண்டும்.
  2. திபெத்தின் தலைநகரான லாசாவில், திபெத்தியர்கள் கொள்ளையடித்த நேபாள வணிகர்களின் உடைமைகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.
  3. நேபாள வணிகர்கள், திபெத் மற்றும் சீனாவில் வணிகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டது.
  4. திபெத் - நேபாள அரசுகளுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டால், இருதரப்பு கோரிக்கையின் படி, சீனப் பேரரசு தலையிட்டு தீர்த்து வைக்கும்.
  5. வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து நேபாளத்தை காக்க சீனா அரசு உதவியாக இருக்கும்.
  6. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நேபாளம் மற்றும் திபெத் இராச்சியங்கள், சீனாவின் சிங் பேரரசுக்கு திறை செலுத்த வேண்டும்.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tibetan and Nepalese Conflict". Official website of Nepal Army. Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
  2. Acharya, Baburam (2013), The Bloodstained Throne: Struggles for Power in Nepal (1775-1914), Penguin Books Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-204-7

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Wright, Daniel, History of Nepal. New Delhi-Madras, Asian Educational Services, 1990

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நேபாளப்_போர்&oldid=4060231" இலிருந்து மீள்விக்கப்பட்டது