பிருகுதி தேவி
இளவரசி பிருகுதி தேவி என்பவர் லிச்சாவி இளவர்சி ஆவார். இவர் திபெத்தியர்களுக்கு அரசரின் நேபாளத் துணைவி ஆவார்.[1][2] எளிமையாக அரச மகள் என்று அழைக்கப்படுகிறார். இவர் புராணங்களில் குறிப்பிடப்படும் தாரா தேவியின் அவதாரமாகவும் திபெத்தின் பண்டைய பேரரசரான சாங்சென் காம்போ (பொ.ச. 605? - 650) என்பவரின் முதல் மனைவியாகவும் பாரம்பரியமாக கருதப்படுகிறார்.[3] அவர் "பெசா" என்றும் அழைக்கப்பட்டார்,[4] இவர் நேபாளத்தின் லிச்சாவி இராச்சியத்தின் இளவரசி ஆவார்.
பிருகுதி தேவியின் வரலாற்றுத்தன்மை உறுதியாக தெரியவில்லை.டூன்ஹுவாங்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களில் இவரைப் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை என்றாலும், "இந்த கருதுகோளை ஆதரிக்கும் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன." [5] இந்த காலகட்டத்தில் திபெத்துக்கும் நேபாளத்துக்கும் இடையே நிச்சயமாக மிக நெருக்கமான உறவுகள் இருந்திருக்கலாம் இதுபோன்ற ஒரு புராண விளக்கம் அத்தகைய திருமணத்தின் வரலாற்று சாத்தியத்தை எந்த வகையிலும் மதிப்பிடாது.[6]
பல திபெத்திய ஆவணங்களின்படி சிவதேவா என்பவருக்கு இணையாக ஆட்சி செய்து பின்னர் திபெத்தை முழுமையாக ஆண்ட அம்சவர்மா (605-621 CE) என்பவரின் மகளாகக் குறிப்பிடப்படுகிறார். இந்தக் கூற்று சரியாக இருந்தால், சான்சென் காம்போ திருமணம் கிபி 624 க்கு சற்று முன்னர் முடிந்துவிட்டது.[7] ஆயினும், ஆச்சார்யா கீர்த்தி துல்கு லோப்சாங் டென்சின் என்பவர் சாங்சன் காம்போ 632 இல் நேபாளத்தைச் சேர்ந்த "அங்சு வர்மா" அல்லது அம்சுவர்மா மன்னரின் மகள் பிருகுதி தேவியை மணந்தார் என்று கூறுகிறார்.[8]
இருப்பினும், சில திபெத்திய புராணங்களின் படி, கோ சா என்ற நேபாள மன்னருக்கு (திபெத்திய பெயரின் நேரடிப் பொருளிலிருந்து சில்வைன் லெவி என்பவரால் "உதயவர்மன்" என்று அடையாளம் காணப்பட்டார்) பிரிபூம் அல்லது பிருகுதி என்று ஒரு மகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
"உதயவர்மன்" பெரும்பாலும் சிவதேவா I இன் மகனும் பின்னர் பிற்காலத்தில், அம்சுவர்மாவினால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மகனும் வாரிசுமான உதயாதேவா என்று தெரிய வருகிறது. இந்த அம்சுவர்மன் என்பவர் வரலாற்றால் அறியப்படும் நரேந்திர தேவாவின் தந்தை என்றும் கருதப்படுகிறார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டால், நரேந்திரதேவாவும், பிருகுதி தேவியும் சகோதரர் மற்றும் சகோதரி என்று பொருள்கொள்ளலாம்.
டாங்ஷு, அல்லது டாங்கின் பழைய புத்தகம் என அழைக்கப்படும் வரலாற்று நூல் ஒன்றில் நேபாளத்தின் மன்னர் நரேந்திரதேவாவினைப் பற்றிய சில விரிவான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.[9] லிச்சாவி மன்னர் நாலிங் தேவாவின் (அல்லது நரேந்திரதேவா) தந்தை இறந்தபோது, இவரது மாமா விஷ்ணகுப்தர் என்பவர் நரேந்திர தேவாவை துரத்திவிட்டு அரியணையை கைப்பற்றினார்.[10] "திபெத்தியர்கள் நரேந்திரதேவாவுக்கு அடைக்கலம் கொடுத்து, அவரை 641 இல் அவரது அரியணையில் மீண்டும் நிறுவினர்; இவ்வாறு அவர் திபெத்துக்கு உட்பட்டார்." [11][12][13]
பிருகுதி தேவி எப்போது சாங்சென் காம்போவை மணந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் விஷ்ணுகுப்தர் துருவதேவாவுடன் இணைந்து அரியணையை கைப்பற்றியதைத் தொடர்ந்து நரேந்திரதேவா திபெத்துக்கு தப்பி ஓடிய ஆன்டு கி.பி. 621 என, அவர்கள் இருவரும் இணைந்து ஆட்சி செய்த காலத்தைய கி.பி 623 ஆம் ஆண்டு தேதியிட்ட ஒரு கல்வெட்டின் படி தெரியவருகிறது.
திபெத்தில் பிருகுதி
[தொகு]திபெத்தின் புகழ்பெற்ற, பாரம்பரிய வரலாற்றின் மிகப் பழைய பிரதியாக கருதப்படும் ''பாவின் ஏற்பாடு, (Testament of Ba) பின்வருமாறு கூறுகிறது:
- "பின்னர் பா சான் போ க்ரி ஸ்ரோங் பா சனின் ஆட்சியின் போது, நேபாள மன்னரின் மகள் கிரி பாசனுடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, லாசா அல்லது ரா சா பெகார் க்ளிங்க் கோயில் (ஜி.டி.எஸ். லக் காங் ) கட்டப்பட்டது. மேலும், ரு பாசியின் நாற்பத்திரண்டு கோயில்களின் கட்டுமானம் கோரப்பட்டு, கோயில் கட்டப்பட்டது. இந்தியக் கோட்பாட்டையும் எழுத்துக்களின் மாதிரியையும் பெறுவதற்காக அரச உத்தரவு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. . . . " [14]
திபெத்திய மரபுகளின்படி, பிருகுதி தேவி ஒரு பக்தியுள்ள புத்தராக இருந்தார், மேலும் பல புனிதமான உருவங்களையும் நேவாரின் கைவினைக் கலைஞர்களையும் தனது வரதட்சணையின் ஒரு பகுதியாக திபெத்துக்குக் கொண்டு வந்தார். லாசாவில் உள்ள மார்போ ரி எனப்படும் சிவப்பு மலையில் இல் உள்ள சிவப்பு அரண்மனை பிருகுதி தேவியின் விருப்பப்படி நேபாள கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இது பின்னர் பதின்மூன்று மாடி கொன்ட பொட்டாலா அரண்மனையாக ஐந்தாவது தலாய் லாமாவால் மீண்டும் புனரமைக்கப்பட்டது, பிருகுதி தேவி நேபாளத்தின் புகழ்பெற்ற சிற்பியான துரோ-வோ என்பவரைக் கொண்டு சாம்யேவின் தப்-வாங் சிலை, சென்ரெசிக் சிலை ஆகிய சிறப்புபெற்ற சிலைகளை செதுக்கச் செய்தார்.[15][16] - இச்சிலை மானுவராஜா சிலை எனவும் அழைக்கப்படுகிறது. இது லாசாவில் உள்ள ராமோச்சீ கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
முதலில் மங்கோலிய படையெடுப்பின் போதும், பின்னர் 1960 களிலும் கோயில் இரண்டு முறை சிதைக்கப்பட்டு சிலை அகற்றப்பட்டது. எனவே நேபாளி இளவரசி கொண்டு வந்த அசல் சிலை இப்போது அங்குள்ள சிலை தான் என்பது சாத்தியமில்லை.சிலையின் கீழ் பாதி லாசா குப்பைத் தொட்டியிலும், மேல் பகுதி பெய்ஜிங்கிலும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இச்சிலைகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலும் சிலையானது எட்டு போதிசத்துவர்களால் சூழப்பட்டுள்ளது.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tenzin, Ahcarya Kirti Tulku Lobsang. "Early Relations between Tibbet and Nepal (7th to 8th Centuries)." Translated by K. Dhondup. The Tibet Journal, Vol. VII, Nos. 1 &2. Spring/Summer 1982, p. 84.
- ↑ Josayma, C.B. ''Gsaya Belsa'': An Introduction, The Tibet Journal, Vol. XVIII, No. 1. Spring 1993, p. 27.
- ↑ Ancient Tibet: Research materials from the Yeshe De Project, p. 202 (1986). Dharma Publishing, Berkeley, California.
- ↑ Dowman, Keith. (1988) The Power-places of Central Tibet: The Pilgrim's Guide, p. 16. Routledge & Kegan Paul, London and New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7102-1370-0.
- ↑ Pasang Wandu and Hildegard Diemberger. dBa' bzhed: The Royal Narrative concerning the bringing of the Buddha's Doctrine to Tibet, p. 26, n. 15. (2000). Verlag der Österreichischen Akademie der Wissenschaften, Wein. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7001-2956-4.
- ↑ Snellgrove, David. 1987. Indo-Tibetan Buddhism: Indian Buddhists and Their Tibetan Successors. 2 Vols. Shambhala, Boston, Vol. II, pp. 416-417.
- ↑ Ancient Tibet: Research materials from the Yeshe De Project, p. 225 (1986). Dharma Publishing, Berkeley, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89800-146-3.
- ↑ Tenzin, Ahcarya Kirti Tulku Lobsang. "Early Relations between Tibbet and Nepal (7th to 8th Centuries)." Translated by K. Dhondup. The Tibet Journal, Vol. VII, Nos. 1 &2. Spring/Summer 1982, p. 85.
- ↑ Pelliot, Paul. Histoire Ancienne du Tibet. Paris. Libraire d'amérique et d'orient. 1961, p. 12.
- ↑ Vitali, Roberto. 1990. Early Temples of Central Tibet. Serindia Publications, London, p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-906026-25-3
- ↑ Snellgrove, David. 1987. Indo-Tibetan Buddhism: Indian Buddhists and Their Tibetan Successors. 2 Vols. Shambhala, Boston, Vol. II, p. 372.
- ↑ Chavannes, Édouard. Documents sur les Tou-kiue (Turcs) occidentaux. 1900. Paris, Librairie d’Amérique et d’Orient. Reprint: Taipei. Cheng Wen Publishing Co. 1969, p. 186.
- ↑ Bushell, S. W. "The Early History of Tibet. From Chinese Sources." Journal of the Royal Asiatic Society, Vol. XII, 1880, pp. 529, n. 31.
- ↑ Pasang Wandu and Hildegard Diemberger. (2000) dBa' bzhed: The Royal Narrative concerning the bringing of the Buddha's Doctrine to Tibet, pp. 25-26, n. 15. Verlag der Österreichischen Akademie der Wissenschaften, Wein. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7001-2956-4.
- ↑ Tenzin, Acharya Kirti Tulku Lobsang. "Early Relations between Tibbet and Nepal (7th to 8th Centuries)." Translated by K. Dhondup. The Tibet Journal, Vol. VII, Nos. 1 &2. Spring/Summer 1982, pp. 85-86.
- ↑ Josayma, C.B. "Gsaya Belsa: An Introduction". The Tibet Journal. Volume XVIII. No. 1 Spring 1993, pp. 27-28.
- ↑ Dowman, Keith. (1988) The Power-places of Central Tibet: The Pilgrim's Guide, p. 59. Routledge & Kegan Paul, London and New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7102-1370-0.