உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டலா அரண்மனை

ஆள்கூறுகள்: 29°39′28″N 91°07′01″E / 29.65778°N 91.11694°E / 29.65778; 91.11694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டலா அரண்மனை
பொட்டலா அரண்மனை
Tibetan name
திபத்திய எழுத்துཔོ་ཏ་ལ
ஒலிபெயர்ப்புபொ ட லா(Po ta la)
சீன மொழி
பண்டைய布達拉宮
இலகுவான布达拉宫
பின்யின்Bùdálā Gōng
பொட்டலா அரண்மனை is located in திபெத்து
பொட்டலா அரண்மனை
பொட்டலா அரண்மனை
திபெத்தில் அமைவிடம்
ஆள்கூற்று:29°39′28″N 91°07′01″E / 29.65778°N 91.11694°E / 29.65778; 91.11694
Monastery information
இடம்லாசா, திபெத்து
நிறுவியதுசொங்ஸ்டன் கம்போ
ஆண்டு637
புதுப்பித்தல்தற்போதைய அரண்மனை 5 வது தாய்லாமாவினால் 1645 இல் கட்டப்பட்டது.
புதுப்பித்தல்: 1989 முதல் 1994, 2002
வகைதிபத்திய பௌத்தம்
மரபுவழிதலாய் லாமா
தலைமை லாமாடென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)
அலுவல் பெயர்பொட்டலா அரண்மனையின் வரலாற்றுத் தோற்றம்
வகைகலாச்சாரம்
வரன்முறைi, iv, vi
தெரியப்பட்டது1994 (18 வது தொடர்)
உசாவு எண்707
Regionஆசியா பசுபிக்
Extensions2000; 2001

பொட்டலா அரண்மனை (Potala Palace; Tibetan: པོ་ཏ་ལWylie: Po ta la, ZYPY: Bodala) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள, 1959 தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) செல்லும் வரை தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது.

போதிசத்துவர் அவலோகிதரின் புராண இருப்பிடமாக பொட்டலா மலையின் பெயர் இவ் அரண்மனைக்கு வைக்கப்பட்டது.[1] 5 வது தலாய் லாமா அவருடைய ஆன்மீக ஆலோசகர் கொசொங் ஆளுவதற்கு ஏற்ற இருப்பிடத்திற்கு பொருத்தமான இடம் எனச் சுட்டிக்காட்டிய டேபெங், செரா மடங்களுக்கு இடையே 1645 இல் கட்டுமான வேலையை ஆரம்பித்தார்.[2][3] இது வெள்ளை அல்லது சிவப்புக் கோட்டை என அழைக்கப்பட்ட, 637 இல் சொங்ஸ்டன் கம்போபோலினால் கட்டப்பட்ட ஆரம்ப அரணின் மிஞ்சிய மேற்பரப்பில் கட்டப்பட்டிருக்கலாம்.[4][5]

இக்கட்டடம் கிழக்கு மேற்காக 400 மீட்டர்கள், வடக்கு தெற்காக 350 மீட்டர்கள், 3 மீட்டர் கனமுள்ள சரிவான கற்சுவர்கள், 5 மீட்டர் (16 அடிக்கு மேல்) கனமுள்ள அடித்தளம் கொண்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கக்கூடியவாறு அடித்தளத்தில் செம்பி ஊற்றப்பட்டுள்ளது.[6] பதின்மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில் 1,000 இற்கு மேற்பட்ட அறைகள், 10,000 சன்னதிகள், 117 மீட்டருக்கு (384 அடி) உயரத்துக்கான கிட்டத்தட்ட 200,000 சிலைகள் ஆகியன "சிவப்புக் குன்று" மீது, பள்ளத்திலிருந்து 300 மீட்டர் (கிட்டத்தட்ட 1,000 அடி) உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.[7]

லகசாவின் மூன்று பிரதான குன்றுகள் "திபெத்தின் மூன்று பாதுகாவலர்களை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாரம்பரியம் உள்ளது. சொக்பொரி எனும் வச்ரபானியின் ஒன்றான மலை பொட்டலாவின் தெற்கிலும், மஞ்சுசிறீயின் பெங்வாரி, பொட்டலா அமைந்துள்ள அவலோகிதரை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபோரிக் குன்று என்பன பிரதான குன்றுகளாகும்.[8]

கட்டவியல்[தொகு]

அரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.[9] இக்கட்டத்தின் பரந்து உள்வாங்கிச் சரிந்த சுவர்கள் பல சன்னல்களைக் கொண்ட நேர் வரிசை மேற்பக்கம் மாத்திரம் உடைந்துள்ளது. சமதளமான கூரைகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது. இவற்றைப் பார்க்கும்போது அரண் போன்ற தோற்றத்தை அளிக்கவில்லை. பாறையின் தென் அடிவாரத்தில் பெரிய இடைவெளி சுவர்களாலும் கதவுகளாலும் சூழப்பட்டு, உட்பக்கத்தில் பாரிய தாழ்வார அமைப்பு காணப்படுகிறது. மென்மையான ஏற்றத்தைக் கொண்ட இடைவெளி மூலம் உடையக்கூடிய ஒரு சுமாரான இலகு படிக்கட்டுகளின் தொடர் பாறை உச்சிக்கு வழிவகுக்கிறது. அதன் மொத்த அகலமும் அரண்மனையால் நிரப்பப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்களின் மத்திய பகுதி மிக உயரத்தில் பரந்த நாற்கோண பெரும்பரப்புக்கு உயர்ந்துள்ளது. மத்திய பகுதியில் உள்ள ஏனைய கட்டங்களிலிருந்து வேறுபட்ட செந்நிறப் பகுதி "சிவப்பு அரண்மனை" என அழைக்கப்படுகிறது. பிரதான மண்டபங்கள், பீடங்கள், முன்னைய தலாய் லாமாக்களின் சன்னதிகள் என்பன இங்குள்ளது. அங்கே உயர் அலங்கார ஓவியங்கள், அணிகல வேலைப்பாடுகள், சிற்பச் செதுக்கல்கள் உட்பட்ட பிற அலங்காரங்களும் அதிகமாகவுள்ளன. பொட்டலா அரண்மனையை அரைவாசி மாதிரியாகக் கொண்டு 1767 முதல் 1771 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்ட, சீன புடோ சொங்செங் கோயிலும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.

இவ் அரண்மனை அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் (குட் மோனிங் அமெரிக்கா) "யு.எஸ்.ஏ டுடே" செய்தித்தாளிலும் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று என பெயரிட்டப்பட்டது.[10]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Stein, R. A. Tibetan Civilization (1962). Translated into English with minor revisions by the author. 1st English edition by Faber & Faber, London (1972). Reprint: Stanford University Press (1972), p. 84
  2. Laird, Thomas. (2006). The Story of Tibet: Conversations with the Dalai Lama, pp. 175. Grove Press, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-1827-1.
  3. Karmay, Samten C. (2005). "The Great Fifth", p. 1. Downloaded as a pdf file on 16 December 2007 from: [1] பரணிடப்பட்டது 2013-09-15 at the வந்தவழி இயந்திரம்
  4. W. D. Shakabpa, One hundred thousand moons, translated with an introduction by Derek F. Maher, Vol.1, BRILL, 2010 p.48
  5. Michael Dillon, China : a cultural and historical dictionary, Routledge, 1998, p.184.
  6. Booz, Elisabeth B. (1986). Tibet, pp. 62-63. Passport Books, Hong Kong.
  7. Buckley, Michael and Strausss, Robert. Tibet: a travel survival kit, p. 131. Lonely Planet. South Yarra, Vic., Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-908086-88-1.
  8. Stein, R. A. (1972). Tibetan Civilization, p. 228. Translated by J. E. Stapleton Driver. Stanford University Press, Stanford, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-0806-1 (cloth); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-0901-7 (paper).
  9. Stein, R. A. Tibetan Civilization (1962). Translated into English with minor revisions by the author. 1st English edition by Faber & Faber, London (1972). Reprint: Stanford University Press (1972), p. 206
  10. "ABC Good Morning America "7 New Wonders" Page". Yahoo.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Potala Palace
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டலா_அரண்மனை&oldid=3350767" இலிருந்து மீள்விக்கப்பட்டது