மகர் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மகர் மக்கள்
मगर
மொத்த மக்கள்தொகை
18,87,733
மொழி(கள்)
மகர் மொழி மற்றும் கைகே மொழி
சமயங்கள்
மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம், ஆவியுலகக் கோட்பாடு
நேபாள மகர் இனப் பெண்கள்

மகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவினர் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர்.

போர்ப் பழங்குடியின மகர் மக்கள்
போர்ப் பழங்குடியின மகர் இன ஆண்

நேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]

குல தெய்வ வழிபாட்டை செய்யும் சமான் சமயத்தை பின்பற்றும் மேற்கு நேபாள மகர் இன மக்கள்

தொழில் & அரசியல்[தொகு]

மகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4]

கோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vaidya, Tulasī Rāma; Mānandhara, Triratna; Joshi, Shankar Lal (1993) (in en). Social history of Nepal. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8170417996. https://books.google.com/books?id=sF5uAAAAMAAJ&q=magarat. 
  2. 2011 Nepal Census, District Level Detail Report
  3. Dor Bahadur Bista. 1972. People of Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar. p. 664.
  4. Eden Vansittart. 1993 (Reprint). The Gurkhas. New Delhi: Anmol Publications. p. 67.
  5. https://www.himalkhabar.com/news/115409

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Acharya, Baburam, Nepalako Samkshipta Itihasa (A short history of Nepal), edited by Devi Prasad Bhandari, Purnima No. 48, Chaitra 2037 (March–April 1981), Chapter VII:

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர்_மக்கள்&oldid=3716485" இலிருந்து மீள்விக்கப்பட்டது