மியாக்தி மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°20′30″N 83°34′00″E / 28.3417°N 83.5666°E / 28.3417; 83.5666
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் மியாக்தி மாவட்டத்தின் அமைவிடம்

மியாக்தி மாவட்டம் (Myagdi District) (நேபாளி: म्याग्दी जिल्लाகேட்க), தெற்காசியாவின் நேபாள நாட்டின், கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் பேனி நகரம் ஆகும்.

தவளகிரி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,297 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,13,641 ஆகும். [1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

மியாக்தி மாவட்டத்தின் உள்ளாட்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

மியாக்தி மாவட்டத்தில் 45 கிராம வளர்ச்சி மன்றங்களும், பெனி எனும் நகராட்சியும் உள்ளது.

சுற்றுலா[தொகு]

மியாக்தி மாவட்டத்தின் காரா கிராம வளர்ச்சி மன்றத்தில் உள்ள பூன் மலைகள் மற்றும் கோராபானி மலைகள் மலையேற்ற வீரர்களுக்கும் மற்றும் மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் பிரபலமானதாகும். [3] [4]ததோபானி வெந்நீர் ஊற்று இம்மாவட்டத்தில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Population and Housing Census 2011 (National Report)" (PDF). Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 2013-04-18. பார்க்கப்பட்ட நாள் November 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)
  3. "Ghorepani Poon Hill Trek". Archived from the original on 2016-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.
  4. Annapurna View trekking.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மியாக்தி_மாவட்டம்&oldid=3567622" இலிருந்து மீள்விக்கப்பட்டது