தன்குட்டா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் தன்குட்டா மாவட்டத்தின் அமைவிடம்

தன்குட்டா மாவட்டம் (Dhankuta District) (நேபாளி: धनकुटा जिल्ला) (இந்த ஒலிக்கோப்பு பற்றி Listen), நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிட நகரம் தன்குட்டா ஆகும்.

இம்மாவட்டம் 891 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 1,63,412 ஆகும். [1] இம்மாவட்டத்தில் நேபாள மொழி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி மஹர் மொழி மற்றும் லிம்பு போன்ற மொழிகள் பேசப்படுகிறது.


வேளாண்மை[தொகு]

தன்குட்டா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 2500 மீட்டர் உயரத்தில் பரவியுள்ளது. தமூர் மற்றும் அருண் ஆறுகள் பாய்கிறது. நெல், சிறுதானியங்கள், எலுமிச்சைப் பழம், இஞ்சி, முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் தேயிலை போன்ற பணப் பயிர்கள் வளர்க்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதிகளில் சால மரங்கள் வளர்ந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல் & தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
கீழ் அயனமண்டலம் 300 மீட்டருக்கும் கீழ் 3.7%
மேல் அயனமண்டலம் 300 - 1,000 மீட்டர்கள் 44.7%
மித அயனமண்டலம் 1,000 - 2,000 மீட்டர்கள் 46.6%
இடை அயனமண்டலம் 2,000 - 3,000 மீட்டர்கள் 3.2%

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

தன்குட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 37 கிராம வளர்ச்சி மன்றங்களும் கொண்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

வேதாதர், தன்குட்டா
வேளாண்மை ஆய்வு மையம், பர்கிபாஸ்

படக்காட்சி[தொகு]


இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 26°58′53″N 87°20′36″E / 26.98139°N 87.34333°E / 26.98139; 87.34333

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்குட்டா_மாவட்டம்&oldid=2163799" இருந்து மீள்விக்கப்பட்டது