தாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°0′N 82°16′E / 28.000°N 82.267°E / 28.000; 82.267 (Deukhuri and Dang Valleys)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேபாளத்தில் தாங் மாவட்டத்தின் அமைவிடம்
நேபாளத்தின் ரப்தி மண்டலத்தில் தாங் மாவட்டம்

தாங் மாவட்டம், மத்திய மேற்கு நேபாளத்தின் , மாநில எண் 5 – இல் ரப்தி மண்டலத்தில் அமைந்துள்ளது. தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோரக்கி நகரம் (முன்னர் இதன் பெயர் திரிபுவன்நகர்) ஆகும். காட்மாண்டு நகரத்தின் மேற்கே 410 கிலோ மீட்டர் தொலைவில் கோரக்கி நகரம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரத்தின் பெயர் துளசிபூர் ஆகும்.

2,955 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 5,48,141 ஆக உள்ளது. [1]இம்மாவட்ட மக்கள் நேபாள மொழி, தாரு மொழி போன்ற மொழிகள் பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் தாரு மக்கள், பகுன் மக்கள், சேத்திரி மக்கள் மற்றும் சட்டி, பானைகள் செய்யும் குமால் இன மக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி, இந்தியாவின் அவத் பகுதியின் பலராம்பூர் மாவட்டம் மற்றும் சிராவஸ்தி மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் மகாபாரத மலைத் தொடர்களில் 1,500 முதல் 1,700 மீட்டர் உயரத்தில் பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் பியுத்தான் மாவட்டம், ரோல்பா மாவட்டம் மற்றும் சல்யான் மாவட்டங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளது.

நேப்பாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு  %
Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) 18.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
69.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி
12.0%

வரலாறு[தொகு]

1760-இல் ஷா வம்சத்து மன்னர்கள், ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை கட்டமைக்கும் போது, தாங் மாவட்டப் பகுதிகளும் நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்[தொகு]

தாங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பது கிராம வளர்ச்சி மன்றங்களும், இரண்டு நகராட்சிகளும் உள்ளது.

வரைபடங்கள்[தொகு]

  • நேபாள கூட்டாட்சி விவகாரங்கள் மற்றும் வட்டார வளர்ச்சிகளுக்கான அமைச்சகம்[3]பதிவிறக்கம் செய்யும் வகையில் மாவட்ட வரைபடங்களை வெளியிட்டுள்ளது:
  1. கிராம வளர்ச்சி மன்றங்களின் எல்லைகள்
  2. பயன்பாட்டிற்கான நிலங்கள்
  3. ஆறுகள், ஓடைகள், குளங்கள்
  4. பேருந்து சாலைகள் மற்றும் ஒத்தையடிப் பாதைகள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013
  3. "Ministry of Federal Affairs and Local Development". Government of Nepal. Retrieved February 21, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்_மாவட்டம்&oldid=3099719" இலிருந்து மீள்விக்கப்பட்டது