உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரத மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 28°45′N 83°30′E / 28.750°N 83.500°E / 28.750; 83.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரத மலைத்தொடர் (Mahabharata Range) (நேபாளி: महाभारत श्रृंखला mahābhārat shrinkhalā) அல்லது சிறிய இமயமலை என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் காஷ்மீர் முதல் தென்கிழக்கில் பூடான் வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.[1] இம்மலைத்தொடர் சிவாலிக் மலைத்தொடருக்கு இணையாக பரவியுள்ளது.

மகாபாரத மலைத் தொடரில் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.

சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன.

மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக கண்டகி ஆறு, பாக்மதி ஆறு, கோசி ஆறுகள் பாய்கிறது.

கோடை காலத்தில் இம்மலைத்தொடர்களில் 10 முதல் 15 பாகை செல்சியஸ் வெப்பம் உணரப்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபாரத_மலைத்தொடர்&oldid=3640106" இலிருந்து மீள்விக்கப்பட்டது