பக்தபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்தபூர்
भक्तपुर
குவாபா தேசம் மற்றும் பாத்கவுன்
நகராட்சி
2015 நேபாள நிலநடுக்கதிற்கு முன் பக்தபூர் நகரச் சதுக்கம்
2015 நேபாள நிலநடுக்கதிற்கு முன் பக்தபூர் நகரச் சதுக்கம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal" does not exist.நேபாளத்தில் பக்தபூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°40′20″N 85°25′40″E / 27.67222°N 85.42778°E / 27.67222; 85.42778ஆள்கூற்று: 27°40′20″N 85°25′40″E / 27.67222°N 85.42778°E / 27.67222; 85.42778
நாடு நேபாளம்
மாநிலம் நேபாள மாநில எண் 3
மாவட்டம் பக்தபூர்
அரசு
 • தலைவர் சுனில் பிரஜாபதி
 • துணைத் தலைவர் ரஜனி ஜோஷி
பரப்பளவு
 • மொத்தம் 6.89
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 81
 • அடர்த்தி 12
நேர வலயம் நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண் 44800
தொலைபேசி குறியீடு 01
இணையதளம் http://bhaktapurmun.gov.np

பக்தபூர் (Bhaktapur) (நேபாளி: भक्तपुर இந்த ஒலிக்கோப்பு பற்றி Listen ), (மாற்று பெயர்கள்: குவாபா தேசம் ( ख्वप देस) மற்றும் பாத்கவுன்), இதனை பக்தர்களின் நகரம் என்றும் அழைப்பர். இந்நகரம் காத்மாண்டு சமவெளிவின் கிழக்கில், நேபாளத்தின் தேசியத் தலைநகரான காட்மாண்டிலிருந்து எட்டு மைல் தொலைவில், நேபாள மாநில எண் 3ல் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது.

மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின், பாக்மதி மண்டலத்தில் அமைந்த எட்டு மாவட்டங்களில் ஒன்றான பக்தபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக பக்தபூர் நகரம் உள்ளது. பத்து நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட நகராட்சிக் குழு, பக்தபூர் நகராட்சியை நிர்வகிக்கிறது.

தொன்மையான பக்தபூர் நகரத்தில், நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில், இரண்டு பக்தபூரில் உள்ளது. அவைகள்: பக்தபூர் நகர சதுக்கம் மற்றும் சங்கு நாராயணன் கோயில் ஆகும்.

இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் உள்ளதால், தட்ப-வெப்ப நிலை அதிக குளிரும், வெப்பமும் இன்றி சீராக உள்ளது.

வரலாறு[தொகு]

காத்மாண்டு சமவெளியின் நேவாரிகளின் மூன்று இராச்சியங்களில் பக்தபூர் இராச்சியம் மிகப் பெரிதாகும். நேவார் மல்ல வம்ச மன்னர்களின் இராச்சியத்தின் தலைநகராக பதினைந்தாம் நூற்றாண்டு முடிய பக்தபூர் நகரம் விளங்கியது.

போர்கள்[தொகு]

மல்லர் வம்சத்தின் செயப்பிரகாசு மல்லாவிற்கும், கோர்க்க மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவிற்கும் இடையே 1767ல் நடைபெற்ற கீர்த்திபூர் போரிலும், பக்தபூர் மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லா தோற்றார். எனவே காத்மாண்டு சமவெளியில் இருந்த மூன்று முக்கிய நகரங்களான காட்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் நகரமும், அதனுடன் இணைந்த கிராமப்புற பகுதிகளும் கோர்க்காலிகளின் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் ஆளுகையின் கீழ் சென்றது. [1].

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பக்தபூர் நகரத்தின் மக்கள் தொகை 83,658 ஆகும். [2]

இந்நகரத்தில் பெரும்பாலனவர்கள் நேவார் மக்கள் ஆவார். இந்நகரத்தில் நேவாரி மொழி மற்றும் நேபாள மொழி அதிக பேசப்படுகிறது. மக்களில் பெரும்பான்மையோர், இந்து மற்றும் பௌத்தர்களாக உள்ளனர். பெரும்பாலன மக்கள் இதன் அருகே அமைந்த நகரங்கள் காட்மாண்டு மற்றும் லலித்பூர் ஆகும்.

பக்தபூர் நகரம், பண்டைய நேபாள நாட்டின் பண்பாடு, கட்டிடக்கலை, வரலாற்று நினைவுச் சின்னங்கள், கலைப்பொருட்கள், மட்பாண்டம், நெசவு, கோயில்கள், குளங்கள், சமயத் திருவிழாக்களை கொண்டதால், வெளிநாட்டுச் சுற்றுலாவினரை ஈர்க்கும் இடமாக உள்ளது.

குறிப்பிடத்தக்க தலங்கள்[தொகு]

பக்தபூர் நகர சதுக்கத்தின் அகலப் பரப்புக் காட்சி

பக்தபூர் நகரச் சதுக்கம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பக்தபூர் நகர சதுக்கம்
உலகப் புகழ்பெற்ற தங்கக் கதவு, பக்தபூர் அரண்மனை

பக்தபூர் நகரத்தில் தொன்மையான அமைந்த பக்தபூர் நகர சதுக்கம், தௌமதி சதுக்கம், தத்தாத்திரேயர் சதுக்கம், மட்பாண்ட சதுக்கம் என நான்கு சதுக்கங்களைக் கொண்டது. காத்மாண்டு சமவெளியில், வெளிநாட்டுச் சுற்றலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடம் பக்தபூர் நகர சதுக்கமாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் இதுவும் ஒன்று.[3]

மல்ல வம்சத்தின் யட்ச மல்லர் என்ற மன்னர் 1427இல் கட்டிய அழகிய மரச்சிற்பங்களுடன் கூடிய பக்தபூர் அரண்மனை 55 மரச்சன்னல்கள் கொண்டது. மன்னர் ரஞ்சித் மல்லர் என்பவர் எழுப்பிய பக்தபூர் அரண்மனையின் தங்கக் கதவுகளில், காளி, கருடன், தேவலோக தேவதைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. பக்தபூர் மன்னரின் அரண்மனையின் வலப்புறத்தில் அழகிய பசுபதிநாதரின் கோயில் உள்ளது.

நயாதபோலா கோயில்[தொகு]

நயாதபோலா கோயில்

பகத்பூர் நகரத்தில் தௌமதி சதுக்கத்தில், நயாதபோலா பௌத்தக் கோயில் ஐந்து நிலைகள் கொண்ட பகோடா அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நேவாரி மல்ல வம்ச மன்னர் இப்பகோடாவை 1701 - 1702 காலத்தில் கட்டினார். [4]

பைரவநாதர் கோயில்[தொகு]

பைரவநாதர் கோயில்

பக்தபூரில் மூன்றடுக்கு பகோடா பௌத்தக் கட்டிடக் கலையில் அமைந்த பைரவநாதர் கோயிலை, மல்ல வம்ச மன்னர் ஜெகத் ஜோதி மல்லர் கட்டினார்.

தத்தாத்ரேயர் கோயில்[தொகு]

தத்தாத்ரேயர் கோயில், பக்தபூர்

சிவபெருமானின் அம்சான தத்தாத்ரேயருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில், மூன்று அடுக்குகள் கொண்ட பகோடா வடிவில் உள்ளது. இக்கோயில் ஐம்பத்தி நான்கு மரச்சன்னல்கள், கலைநயமிக்க சிற்பவேலைபாடுகளுடன் கூடியது. இதனை மல்ல வம்சத்து யக்ச மல்லர் (கிபி 1428 - 1482) கட்டினார்.

தத்தாத்ரேயர் கோயிலின் கலைநயமிக்க சிற்பவேலைபாடுகளுடன் கூடிய சன்னல்கள்

சங்கு நாராயணன் கோயில்[தொகு]

முதன்மைக் கட்டுரை: சங்கு நாராயணன் கோயில்

திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சங்கு நாராயணன் கோயில், பக்தபூரின் வடக்கில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் கிபி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலும் நேபாளத்தின் ஒன்பது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். [5][6]

தா புக்கு (சித்த பொக்கரி) குளம்[தொகு]

சித்த பொக்கரி

தா புக்கு குளம், செவ்வக வடிவத்தில் அமைந்த பெரிய குளம். இது பக்தபூர் நகரத்தின் நுழைவு வாயில் உள்ளது. மல்ல வம்சத்தின் யட்ச மல்லர் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் இக்குளத்தை நிறுவியதாக கருதப்படுகிறது.[7]

கைலாஷ் மகாதேவர் சிலை[தொகு]

பக்தபூர் நகரத்தில் அமைந்த 143 அடி உயரத்தில் அமைந்த கைலாஷ் மகாதேவர் சிலை, உலகின் உயரமான சிவபெருமான் சிலையாகும். இச்சிலை செப்பு, சிமெண்ட், தாமிரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டதாகும். இச்சிலையின் பணி 2004ல் துவக்கப்பட்டது. 21 சூன் 2012ல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

நிலநடுக்கங்கள்[தொகு]

1934ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தால் பக்தபூர் நகர சதுக்கம் சேதமடைந்தது.[8] 1934 நிலநடுக்கதிற்கு முன்னர் மூன்று தொகுதிகளுடன் கோயில்கள் இருந்தது. 1934 நிலநடுக்கத்தில் 99 வாசல்களுடன் இருந்த பக்தபூர் அரண்மனை 6 வாசல்களுடன் மட்டுமே எஞ்சியிருந்தது.

25 ஏப்ரல் 2015 அன்று காலை 11.56 மணியளவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், பக்தபூர் நகரத்தின் பண்டைய கோயில்கள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள் கடும் சேதமடைந்தது. இதில் பெரும் சேதமடைந்த உலகப் பாரம்பரியக் களமான பக்தபூர் நகரச் சதுக்கமும் ஒன்றாகும்.[9] [10] [11]

விழாக்கள்[தொகு]

பக்தபூரின் தெருக் காட்சி

பக்தபூர் நகர மக்களின் முக்கிய திருவிழாக்கள் தீபாவளி, ஹோலி, மகரசங்கராந்தி, நேபாள புத்தாண்டு மற்றும் சிறீ பஞ்சமியாகும்.

பிரபல கலாசாரத்தில்[தொகு]

லிட்டில் புத்தா எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் பக்தபூர் நகரத்தில் படமெடுக்கப்பட்டது. மேலும் பாலிவுட்டின் இந்தி மொழி ஹரே ராம ஹரே கிருஷ்னா மற்றும் பாபி திரைப்படங்களின் சில காட்சிகள் பக்தபூர் நகரத்தில் படமெடுக்கப்பட்டது.[12].

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

Retrieved: 8 May 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தபூர்&oldid=2492381" இருந்து மீள்விக்கப்பட்டது