பாகலுங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாள மாநில எண் 4-இல் பாகலுங் மாவட்டத்தின் அமைவிடம்

பாகலுங் மாவட்டம் (Baglung District) (நேபாளி: बागलुङ जिल्ला About this soundListen ), நேபாளத்தின் மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைநகரம் காளி கண்டகி ஆற்றின் கரையில் உள்ள பாகலுங் நகரம் ஆகும்.

இம்மாவட்டம் 1,784 சதுர கிலோ மீட்டரும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,68,613 மக்கள் தொகையும் கொண்டது. [1]

கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்[தொகு]

பாகலுங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளும்

பாகலுங் மாவட்டம் 59 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் கொண்டது. உயர்ந்த மலைப்பாங்கான பாகலாங் மாவட்டத்தில் பல மலை ஆறுகளையும், தொங்கும் பாலங்களையும் கொண்டது. இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

இம்மலை மாவட்டத்தில் மூலிகைச் செடிகள், நெல், சோளம், கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

பாகலுங் மாவட்டத்தின் கோடை கால அதிக பட்ச வெப்பம் 37.5 பாகை செல்சியஸ் ஆகவும், குளிர் கால குறைந்த பட்ச வெப்பம் -15 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவி உள்ளது.

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 2.8%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 37.1%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 39.4%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள் 18.6%
மான்ட்டேன்# ஆல்பைன் புல்வெளிகள் & தூந்திரா 4,000 - 5,000 மீட்டர்கள் 2.1%

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°16′N 83°36′E / 28.267°N 83.600°E / 28.267; 83.600

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகலுங்_மாவட்டம்&oldid=2164425" இருந்து மீள்விக்கப்பட்டது