சிந்துலி மாவட்டம்

சிந்துலி மாவட்டம் (Sindhuli District) (நேபாளி: सिन्धुली जिल्लाகேட்க (உதவி·தகவல்)), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.[ நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றான சிந்துலி மாவட்டம், ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கமலாமாய் நகரம் ஆகும்.
இம்மாவட்டம் 2,491 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,96,192 ஆக உள்ளது.[1][2]இம்மாவட்டத்தில் நேபாள மொழி, மஹர் மொழி, தமாங் மொழி மற்றும் செபாங் மொழிகள் பேசப்படுகிறது. முன்பு மரங்களை வெட்டி பிழைப்பு நடத்திய இம்மாவட்டட்தில் அதிகமாக வாழும் தமாங் இன மலை வாழ் மக்கள், அரசின் தடை காரணமாக, தற்போது கால்நடைகளை வளர்ப்பதன் கிடைக்கும் வருவாயை நம்பியுள்ளனர்.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]
மத்திய நேபாளத்தில் அமைந்த இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம்,மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று நிலைகளில் காணப்படுகிறது. [3]
கிராமிய நகராட்சிகளும், நகரபுற நகராட்சிகளும்[தொகு]

சிந்துலி மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராமிய நகராட்சிகளும், கமலாமாய் மற்றும் தூத்தௌலி என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் உள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal". http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/VDC_Municipality.pdf.
- ↑ General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help)
வெளி இணைப்புகள்[தொகு]
- [www.ddcsindhuli.gov.np சிந்துலி மாவட்ட இணையதளம்]

- UN map of VDC boundaries, water features and roads in Sindhuli பரணிடப்பட்டது 2016-12-01 at the வந்தவழி இயந்திரம்