பால்பா மாவட்டம்


பால்பா மாவட்டம் (Palpa District) (நேபாளி: पाल्पा जिल्लाⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தான்சேன் நகரம் ஆகும்.
லும்பினி மண்டலத்தில் உள்ள பால்பா மாவட்டத்தின் பரப்பளவு 1,373 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,180 ஆகும்.[1]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]பால்பா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [2]
உள்ளாட்சி நிர்வாகம்
[தொகு]
பால்பா மாவட்டம் தான்சேன் மற்றும் இராம்பூர் என இரண்டு நகராட்சிகளையும், ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.
முக்கிய ஆறுகள்
[தொகு]பால்பா மாவட்டத்தில் காளி கண்டகி ஆறு, தினௌ ஆறு, ரித்திஆறு, பூர்வா ஆறு, சூம்சா ஆறு மற்றும் தோவன் ஆறு என ஆறு ஆறுகள் பாய்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2011 Nepal census (National Report)" (PDF). Central Bureau of Statistics. Government of Nepal. Archived from the original (PDF) on 2013-04-18. Retrieved November 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|ref=
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- [ http://ddcpalpa.gov.np/ Official Website பால்பா மாவட்ட இணையதளம்]
- UN map of VDC boundaries, water features and roads in Palpa