ஹும்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் ஹும்லா மாவட்டத்தின் அமைவிடம்

ஹும்லா மாவட்டம் (Humla District) (நேபாளி: हुम्ला जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Humla.ogg, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 6–இல் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிமிகோட் நகரம் ஆகும்.

5,655 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹும்லா மாவட்டத்தின் மக்கள் தொகை 50,858 ஆகும்.[1] ஹும்லா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

ஹும்லா மாவட்டத் தலைமையிடம் சிமிகோட்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் அமைந்த திபெத் தன்னாட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத் தலைமையிடமான சிமிகோட்டிலிருந்து, கயிலை மலைக்கு நடைபாதையாக செல்வதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
2.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்
8.9%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் தட்ப வெப்பம் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
19.4%
மான்ட்டேன்#ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் தூந்திரப் பகுதிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 16,400 அடிகள்
58.7%
பனிப்பொழிவு 5,000 மீட்டர்களுக்கும் மேல் 10.7%

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

ஹும்லா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

ஹும்லா மாவட்டத்தில் முப்பது கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

மருத்துவ நலம்[தொகு]

  • மாவட்ட மருத்துவ மனை : 1
  • ஆரம்ப சுகாதார மையங்கள் : 0
  • மருத்துவ மையங்கள் : 10
  • துணை மருத்துவ மையங்கள் : 16
  • மருத்துவர்களின் எண்ணிக்கை: 3
  • செவிலியர்களின் எண்ணிக்கை: 35

இம்மாவட்ட மக்கள் அலோபதி மருத்து முறையை விட உள்ளூர் மருத்துவ சிகிச்சைகளையே பெரிதும் நாடுகின்றனர்.

சுற்றுலா[தொகு]

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம், மலையேற்ற பயிற்சிக்கு உகந்ததாக உள்ளது. சிமிகோட் வானூர்தி நிலையம், வெளி நாட்டு மலை ஏற்ற வீரர்களுக்கு உதவியாக உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஹும்லா


ஆள்கூற்று: 29°58′N 81°50′E / 29.967°N 81.833°E / 29.967; 81.833

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹும்லா_மாவட்டம்&oldid=2554037" இருந்து மீள்விக்கப்பட்டது