கர்ணாலி பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ணாலி பிரதேசம்
முன்னாள் பெயர் மாநில எண் 6

कर्णाली प्रदेश
மாநிலம்
மேலிருந்து வலமாக: பொக்காரா ஏரி, சிஞ்சா சமவெளி, சிமிகோட், ராரா ஏரி, கர்ணாலி பாலம் மற்றும் காஞ்சிரோபா
கர்ணாலி பிரதேசம் எனும் முன்னாள் மாநில எண் 6 (இளஞ்சிவப்பு நிறத்தில்)
கர்ணாலி பிரதேசம் எனும் முன்னாள் மாநில எண் 6 (இளஞ்சிவப்பு நிறத்தில்)
நாடு நேபாளம்
நிறுவப்பட்டது20 செப்டம்பர் 2015
தலைநகரம்விரேந்திரநகர்
முக்கிய நகரங்கள்விரேந்திரநகர்
மாவட்டங்கள்10
அரசு
 • நிர்வாகம்கர்ணாலி பிரதேச அரசு
 • ஆளுநர்துர்கா கேசர் கனால்
 • முதலமைச்சர்மகேந்திர பகதூர் சாகி ( மாவோயிஸ்ட்)
 • அவைத்தலைவர்ராஜ் பகதூர்
 • சட்டமன்றத் தொகுதிகள்
 • மாநில சட்டமன்றம்
அரசியல் கட்சிகள்
பரப்பளவு
 • மொத்தம்30,213 km2 (11,665 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,570,418
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
இனங்கள்கர்ணாலி மக்கள்
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
GeocodeNP-SI
அலுவல் மொழிநேபாளி


கர்ணாலி பிரதேசத்தின் பத்து மாவட்டங்கள்

கர்ணாலி பிரதேசம் (Karnali Pradesh) (நேபாளி: कर्णाली प्रदेश) (முன்னாள் பெயர்:மாநில எண் 6), 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். [1]30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).[2] இம்மாநிலம் 10 மாவட்டங்களைக் கொண்டது.

நேபாளத்தின் வடமேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேச மாநிலத்தின் முன்னாள் பெயர் மாநில எண் 6 ஆகும். பிப்ரவரி, 2018ல் பதவியேற்ற இம்மாநில சட்டமன்றத் தீர்மானத்தின் படி, இம்மாநிலத்தின் பெயர் கர்ணாலி பிரதேசம் பெயரிப்பட்டது.[3]சனவரி, 2018ல் விரேந்திரநகர் இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.[4]

கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்[தொகு]

கர்ணாலி பிரதேச்ம் 30,301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17,01,800 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. மேற்கு ருக்கும் மாவட்டம்
2. சல்யான் மாவட்டம்
3. டோல்பா மாவட்டம்
4. சூம்லா மாவட்டம்
5. முகு மாவட்டம்
6. ஹும்லா மாவட்டம்
7. காளிகோட் மாவட்டம்
8. ஜாஜர்கோட் மாவட்டம்
9. தைலேக் மாவட்டம்
10. சுர்கேத் மாவட்டம்

அரசியல்[தொகு]

இம்மாநில சட்டமன்றம் 40 உறுப்பினர்கள் கொண்டது. அதில் 24 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 16 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும் மற்றும் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 12 உறுப்பினர்களையும் இம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர்.

கர்ணாலி மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணி கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் மகேந்திர பகதூர் சாகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார.[5] நேபாளி காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது.

2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிதாசாரத்தில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகுகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 14 169,755 34.35 6 20
மாவோயிஸ்ட் மையம் 9 162,003 32.78 5 14
நேபாளி காங்கிரஸ் 1 117,298 23.74 4 5
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி 0 15,629 3.16 1 1
பிறர் 0 29,477 5.97 0 0
மொத்தம் 24 494,162 100 16 40
Source: Election Commission of Nepal பரணிடப்பட்டது 2022-11-10 at the வந்தவழி இயந்திரம்

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

2023 நிலநடுக்கம்[தொகு]

இப்பிரதேசத்தில் 9 நவம்பர் 2023 நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் மேற்கு ருக்கும் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து 150 மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.[6][7][8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணாலி_பிரதேசம்&oldid=3821372" இருந்து மீள்விக்கப்பட்டது