உள்ளடக்கத்துக்குச் செல்

தூரமேற்கு பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூரமேற்கு பிரதேசம்
நேபாளத்தின் மேற்கில் அமைந்த மாநில எண் 7
நேபாளத்தின் மேற்கில் அமைந்த மாநில எண் 7
மாநில எண் 7ன் 9 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்
மாநில எண் 7ன் 9 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்
நாடு நேபாளம்
மாநில எண் 720 செப்டம்பர் 2015
தலைநகரம்தங்கடி
நகரம்தங்கடி, பீம்தத்தா (மகேந்திரநகர்) மற்றும் தீப்பாயல்
மாநில எண் 79 மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்மாநில எண் 7 அரசு
 • ஆளுநர்மோகன்ராஜ் மல்லா
 • முதலமைச்சர்திரிலோசன பட்டா[1] ( மாவோயிஸ்ட்)
 • அவைத்தலைவர்அர்சூன் பகதூர் தாபா
 • சட்டமன்றத் தொகுதிகள்மொத்தம் 53 உறுப்பினர்கள்
32 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும் + 21 விகிதாச்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 • மாநிலச் சட்டமன்றம்
அரசியல் கட்சிகள்
பரப்பளவு
 • மொத்தம்19,539 km2 (7,544 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,52,517
 • அடர்த்தி130/km2 (340/sq mi)
இனம்நேபாளிகள்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
புவிசார் குறியீடுNP-SE
அலுவல் மொழிகள்நேபாளி

தூரமேற்கு பிரதேசம் (முன்னர்:மாநில எண் 7) (सुदूरपश्चिम प्रदेश), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக துவக்கப்பட்ட மாநிலமாகும். 2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் [2], பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, 75 மாவட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்களின் ஒன்றாகும். [2] [3]தற்காலிகமாக இமமாநிலத்திற்கு மாநில எண் 7 என பெயரிடப்பட்டுள்ளது.[2] இம்மாநிலம் நோபாளத்தில் தூரமேற்கில் உள்ளதால், தற்போது இம்மாநிலத்தின் பெயர் தூரமேற்கு பிரதேசம் என அழைக்கப்படுகிறது.

2017 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக தங்கடி நகரத்தை தேர்வு செய்துள்ளது.

இம்மாநில 19,539 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 2,552,517 ஆகும். இம்மாநிலம் ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது.

அமைவிடம்

[தொகு]

நேபாளத்தின் தூரமேற்கில் அமைந்த இம்மாநிலத்தின் தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவும், கிழக்கிலும், வடக்கிலும் நேபாள மாநில எண் 6 மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதி எல்லைகளாக அமைந்துள்ளது.

அரசியல்

[தொகு]

இம்மாநிலம் மொத்தம் 53 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 32 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 21 விகிதாச்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு எட்டு உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 16 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.

மாநில எண் 7-இன் மாவட்டங்கள்

[தொகு]

மாநில எண் 7, ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

1. பாசூரா மாவட்டம்
2. பஜாங் மாவட்டம்
3. டோட்டி மாவட்டம்
4. அச்சாம் மாவட்டம்
5. தார்ச்சுலா மாவட்டம்
6. பைத்தடி மாவட்டம்
7. டடேல்துரா மாவட்டம்
8. கஞ்சன்பூர் மாவட்டம்
9. கைலாலீ மாவட்டம்

மக்கள் வகைப்பாடு

[தொகு]



தூரமேற்கு பிரதேசத்தில் சமயம்

  பிறர் (0.38%)

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாநில மக்கள்தொகை 25,52,517 ஆகும். இது நேபாளத்தின் மொத்த மக்கள்தொகையில் 9.63% ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,217,887 ஆகவும்; பெண்கள் 1,334,630 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 130 மக்கள் வீதம் உள்ளனர். கடந்த 2001 - 2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.53% ஆகவுள்ளது. பாலின விகிதம் 912 ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர். நகர மக்கள்தொகை 58.9% மற்றும் கிராமப்புற மக்கள்தொகை 41.1% ஆகவுள்ளது.[4]

2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

இம்மாநில சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 53 தொகுதிகளில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகள் கூட்டணி அரசு, திரிலோசன பட்டா தலமையில் அமைந்துள்ளது. 12 தொகுதிகளில் வென்ற நேபாளி காங்கிரஸ் மற்றும் 2 தொகுதிகளில் வென்ற ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் எதிர் கட்சிகளாக உள்ளது. இம்மாநில முதலமைச்சராக மாவோயிஸ்ட் கட்சியின் திரிலோசன பட்டாவும், ஆளுநராக மோகன்ராஜ் மல்லாவும், சட்டமன்றத் தலைவராக அர்ஜுன் பகதூர் தாபாவும் உள்ளனர்.

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 17 295,729 37.38 8 25
நேபாளி காங்கிரஸ் 4 260,955 32.99 8 12
மாவோயிஸ்ட் 10 142,702 18.04 4 14
ராஷ்டிரிய ஜனதா கட்சி 1 36,902 4.66 1 2
பிறர் 0 54,784 6.93 0 0
மொத்தம் 32 791,072 100 21 53
மூலம்: Election Commission of Nepal

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhatta appointed Chief Minister of Province 7
  2. 2.0 2.1 2.2 "Nepal Provinces". statoids.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
  3. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  4. "Nepal Census 2011" (PDF). UN Stats. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரமேற்கு_பிரதேசம்&oldid=3095533" இலிருந்து மீள்விக்கப்பட்டது