உள்ளடக்கத்துக்குச் செல்

மாதேஷ் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதேஷ் மாநிலம்
प्रदेश नं० २
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து
ஜானகி கோயில், வீரகுஞ்ச் நகர நுழைவாயில், கத்தி மாதா கோயில், சின்னமஸ்தா பகவதி கோயில் மற்றும் கங்காலினி கோயில்
நேபாளத்தில் மாதேஷ் மாநிலத்தின் அமைவிடம்
நேபாளத்தில் மாதேஷ் மாநிலத்தின் அமைவிடம்
வார்ப்புரு:Province No. 2 districts labelled map

மாதேஷ் மாநிலத்தின் வரைபடம்
நாடு நேபாளம்
நிறுவியது20 செப்டம்பர் 2015
தலைநகரம்ஜனக்பூர்
பெரிய நகரம்வீரகுஞ்ச்
மாவட்டம்8 மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்மாநில சட்டமன்ற எண் 2
 • ஆளுநார்இராஜேஷ் ஜா [1]
 • முதலமைச்சர்முகமது லால்பாபு ரவுத் (நேபாள சமாஜ்வாதி கட்சி)
 • உயர் நீதிமன்றம்ஜனக்பூர் உயர் நீதிமன்றம்
 • சட்டமன்றம்ஓரவை முறைமை (107 இடங்கள்)
 • நாடாளுமன்றத் தொகுதிகள்32
பரப்பளவு
 • மொத்தம்9,661 km2 (3,730 sq mi)
 • பரப்பளவு தரவரிசை7ஆம் இடம்
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்61,58,649
 • தரவரிசை2ஆம் இடம்
 • அடர்த்தி640/km2 (1,700/sq mi)
  அடர்த்தி தரவரிசை1வது இடம்
இனம்நேபாளியர்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
Area code041
அலுவல் மொழிநேபாள மொழி
பிற மொழிகள்1. மைதிலி மொழி
2 போஜ்புரி மொழி
3. பஜ்ஜிகா மொழி
மனித மேம்பாட்டுச் சுட்டெண்0.512 (low)
எழுத்தறிவு56.54%
பாலின விகிதம்101.18 /100 (2011)
இணையதளம்http://p2.gov.np

மாதேஷ் மாநிலம் (நேபாளி: मधेश प्रदेश) நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். இது நேபாளத்தின் தென்கிழக்கில் தராய் சமவெளியில் உள்ளது. இதன் தலைநகரம் ஜனக்பூர் ஆகும். இதன் பெரிய நகரம் வீரகுஞ்ச் ஆகும். இம்மாநிலத்தின் இந்தியா வம்சாவழியினரான மாதேசி மக்கள் அதிகம் வாழ்வதால் இம்மாநிலத்திற்கு மாதேஷ் மாநிலம் எனப்பெயராயிற்று. முன்னர் இம்மாநிலத்தை நேபாள மாநில எண் 2 என அழைத்தனர்.

இம்மாநிலம், 2015 அரசியல் அமைப்பு சட்டப்படி 20 செப்டம்பர் 2015 அன்று நிறுவப்பட்டது.[2]

17 சனவரி 2018ல் கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனக்பூர் நகரம் இம்மாநிலத்தின் இடைக்காலத் தலநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.[3]

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், நேபாளத்தில் இரண்டாவதாக உள்ளது.[4]மேலும் பரப்பளவில், சிறிய மாநிலமாகும்.

எல்லைகள்[தொகு]

இம்மாநிலத்தின் கிழக்கிலும், வடக்கிலும் மாநில எண் 1 மற்றும் வடக்கிலும், மேற்கிலும் மாநில எண் 3 எல்லைகளாக உள்ளது. மேலும் தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்துடன் பன்னாட்டு எல்லைகள் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

9661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 5,404,145 ஆகும். [5]இம்மாநிலத்தின் மக்கள் மைதிலி மொழி, போஜ்புரி மொழி, இந்தி மொழி, நேபாளி மொழிகளை பேசுகின்றனர்.

அரசியல்[தொகு]

இம்மாநில சட்டமன்றத்தின் 107 உறுப்பினர்களுக்கான, தேர்தலில், 64 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 43 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும்; நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 32 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

மாநில எண் 2ன் சட்டமன்றத் தேர்தல் 2017 முடிவுகள்[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 8 370,550 24.11 11 19
ராஷ்டிரிய ஜனதா கட்சி 15 318,524 20.72 10 25
நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி 20 284,072 18.48 9 29
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 14 249,734 16.25 7 21
மாவோயிஸ்ட் 6 182,619 11.88 5 11
நேபாள சாங்கியா சமாஜ்வாடி கட்சி 0 32,864 2.14 1 1
பிறர் 0 98,808 6.42 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 64 1,537,171 100 43 107
Source: Election Commission of Nepal

அரசாங்கம்[தொகு]

மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி தலைமையிலான கூட்டணி அரசு அமைச்சரவை அமைத்தது. இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக நேபாள சோசலிச கூட்டமைப்பு முன்னணி கட்சியின் முகமது லால் பாபு ரவுத் கத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7]

நிர்வாகம்[தொகு]

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக எட்டு மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

# பெயர் நேபாளி மொழியில் தலைமையிடம் மக்கள் தொகை (2011) பரப்பளவு இணையத்தளம்
1 பாரா மாவட்டம் बारा जिल्ला கலையா 687,708 1,190 km² [1]
2 தனுஷா மாவட்டம் धनुषा जिल्ला ஜனக்பூர் 754,777 1,180 km² [2]
3 மகோத்தரி மாவட்டம் महोत्तरी जिल्ला ஜலேஷ்வர் 627,580 1,002 km² [3]
4 பர்சா மாவட்டம் पर्सा जिल्ला வீரகுஞ்ச் 601,017 1,353 km² [4]
5 ரவுதஹட் மாவட்டம் रौतहट जिल्ला கௌர் 686,722 1,126 km² [5]
6 சப்தரி மாவட்டம் सप्तरी जिल्ला ராஜ்பிராஜ் 639,284 1,363 km² [6]
7 சர்லாஹி மாவட்டம் सर्लाही जिल्ला மலாங்வா 769,729 1,259 km² [7]
8 சிராஹா மாவட்டம் सिराहा जिल्ला சிராஹா 637,328 1,188 km² [8]

மாவட்டங்கள் மாநகராட்சிகளாகவும், துணை மாநகராட்சிகளாகவும், நகர்புற நகராட்சிகளாகவும், கிராம்ப்புற நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.மாநில எண் 2-இல் சமயங்கள்

  பிறர் (0.44%)

மொழிகள்

  மைதிலி (45.30%)
  நேபாளி (6.67%)
  உருது (5.87%)
  தாரு (3.77%)
  மகதி (0.57%)
  இந்தி (0.16%)
  பிற மொழிகள் (4.44%)

புவியியல்[தொகு]

நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தின் கிழக்கில் கோசி ஆறும் மற்றும் பாக்மதி ஆறு, கமலா ஆறு, லக்கந்தேய் ஆறு, விஷ்ணமதி ஆறுகளும் பாய்கிறது.

போக்குவரத்து[தொகு]

மலைகள் அற்ற சமவெளியில் அமைந்த இம்மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் நன்குள்ளது.

சாலைகள்[தொகு]

மகேந்திரா நெடுஞ்சாலை இம்மாநிலத்தில் கிடைமட்டத்தில் செல்வதால், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியின் நகரங்கள், இம்மாநிலத்தின் வீரகுஞ்ச் மற்றும் ஜனக்பூர் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [8] திரிபுவன் நெடுஞ்சாலை இம்மாநிலத்தின் வழியாக நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்தையும் மற்றும் இந்திய நகரங்களையும் இணைக்கிறது. [9]

வானூர்தி நிலையங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Republica. "Rajesh Jha is new governor of Province 2". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  2. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  3. "Places proposed for temporary capitals of all seven provinces - News, sport and opinion from the Kathmandu Tribune's global edition" (in en-US). News, sport and opinion from the Kathmandu Tribune's global edition. 2018-01-02. https://kathmandutribune.com/places-proposed-temporary-capitals-seven-provinces/. 
  4. Law, G. (2015). "Provinces of Nepal". statoids.com. பார்க்கப்பட்ட நாள் 23 February 2018.
  5. "National Population and Housing Census 2011" (PDF). Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 1 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Raut appointed Chief Minister of province-2 - News, sport and opinion from the Kathmandu Tribune's global edition". News, sport and opinion from the Kathmandu Tribune's global edition (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-14. Archived from the original on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2018-03-13.
  7. "Lalbabu Raut to be sworn in Province 2 CM today". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-14. பார்க்கப்பட்ட நாள் 2018-03-13.
  8. Reed, David (2002). The Rough Guide to Nepal (in ஆங்கிலம்). Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781858288994.
  9. "Highways in Nepal". Archived from the original on 2010-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதேஷ்_மாநிலம்&oldid=3853850" இலிருந்து மீள்விக்கப்பட்டது