உள்ளடக்கத்துக்குச் செல்

மலைச் சூழற்றொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மான்ட்டேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹவாய் தீவுகளில் உள்ள வைமியா பள்ளக்கிடப்பு (Waimea Canyon) ஒரு மான்ட்டேன் என்னும் உயர்நிலப்பகுதி வகையைச் சார்ந்த பகுதியாகும்.

உயிரிய நிலவகைப்பாட்டில் (biogeography), மான்ட்டேன் (Montane) என்பது சற்று கூடுதலான மழை பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் வகை நிலப்பகுதியானது கீழ் அல்பைன் மட்டத்துக்கும் சற்றுத் தாழ்வான பகுதி[1]. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும் பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.

மான்ட்டேன் (montane) என்னும் சொல்லாட்சியின் பொருள் மலை, மலைசார்ந்த (of the mountains) என்பதாகும். மரம் வளராப் பகுதியின் எல்லையாகிய மர வரிசைகள் காணப்படும் உயர்மலைப் பகுதிக்கும் (அல்பைன்) கீழே (தாழ்வான நிலங்களில்), காடுகளாக இல்லாமல் தனி மரங்களும் குருமோல்ட்ஃசுகளும் (Krummholz)(குறுமுறுக்கான மரங்களும் மட்டும் கொண்ட பகுதியாகக்)காணப்படும் நிலமாகிய கீழ் ஆல்ப்பைன் நிலபகுதிக்கும் கீழாக உள்ள பகுதி இந்த மான்ட்டேன் எனப்படும் பகுதியாகும்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Montane Forests". Olympic National Park. United States National Park Service.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்_சூழற்றொகுதிகள்&oldid=3362804" இலிருந்து மீள்விக்கப்பட்டது