சர்லாஹி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் சர்லாஹி மாவட்டத்தின் அமைவிடம்

சர்லாஹி மாவட்டம் (Sarlahi district) (நேபாளி: ne:सर्लाहीஇந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), தெற்காசியாவில் அமைந்த நேபாள நாட்டின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் சர்லாஹி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மலங்கவா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் குறுக்கே பாயும் ஆறுகளில் பாக்மதி ஆறு பெரியதாகும்.

ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 1,259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இம்மாவட்டத்தின் மேற்கில் பாக்மதி ஆறும், கிழக்கில் மகோத்தாரி மாவட்டமும், வடக்கில் சிவாலிக் மலைகளும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தில் உருளைக் கிழங்கு, கரும்புச் சாகுபடி மற்றும் மீன் பிடித்தல் தொழில் வளமையாக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் உயரம் வரை உள்ளதால், கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது.[2].நிலவியல் படி இம்மாவட்டம், வடக்கில் சுயுரி மலைப் பகுதி, நடுவில் பன்வார் பகுதி, தெற்கில் தராய் சமவெளிப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 3,89,756 ஆகவும் மற்றும் பெண்கள் 3,79,973 ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் எண்பத்தி ஐந்து விழுக்காடாகவும், இசுலாமியர்கள் 9.9 விழுக்காடாகவும், பௌத்தர்கள் 2.71 விழுக்காடாகவும், கிறித்தவர்கள் 0.22 விழுக்காடாகவும், பிற மக்கள் 0.25 விழக்காடாகவும் உள்ளனர். .[4] இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.

நாடாளுமன்ற தொகுதிகள்[தொகு]

சர்லாஹி மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]

உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

சர்லாஹி மாவட்ட கிராம வள்ர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

நகராட்சிகள்[தொகு]

சர்லாஹி மாவட்டம் மலங்காவா நகராட்சி, ஹரியோன் நகராட்சி, லால்பண்டி நகராட்சி, ஈஸ்வர்பூர் நகராட்சி மற்றும் பர்ஹத்வா நகராட்சி என ஐந்து நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

சர்லாஹி மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள 101 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூற்று: 26°51′21″N 85°33′44″E / 26.855712°N 85.562360°E / 26.855712; 85.562360

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்லாஹி_மாவட்டம்&oldid=2167516" இருந்து மீள்விக்கப்பட்டது