மொரங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாள மாநில எண் 1-இல் மொரங் மாவட்டத்தின் வரைபடம்
மொரங் மாவட்டத்தின் கிராமிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளைக் காட்டும் வரைபடம்

மொரங் மாவட்டம் (Morang District) (நேபாளி: मोरङ जिल्ला இந்த ஒலிக்கோப்பு பற்றி listen), நேபாள மாநில எண் 1-இல் கிழக்கு பிராந்தியத்தின் கோசி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,855 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 9,65,370 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.[1]

இம்மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் நேபாள அரசியலுக்கு பெயர் பெற்றது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விராட்நகர் ஆகும்.

பன்முகத் தன்மை கொண்ட புவியியலும், பண்பாடும் கொண்ட இம்மாவட்டத்த்ல் நேபாளி மொழி (38%), மைதிலி மொழி (36%), தாரு மொழி (6%), இராஜ்வன்சி (3.7%), லிம்பு மொழி (3.6%), உருது (3.1%) பேசப்படுகிறது.

வரலாறு[தொகு]

மொரங் மாவட்டம், சன்சரி மாவட்டம் மற்றும் ஜாபா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்ட மொரங் இராச்சியத்தை கிராதர்களின் லிம்பு இன மன்னர் நிறுவினர். பின்னர் மொரங் இராச்சியம், கோர்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் கோர்க்கா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்[2] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 80.9%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 11.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 7.4%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 0.2%

வேளாண்மை[தொகு]

கிழக்கு நேபாளத்தில் உள்ள மொரங் மாவட்டத்தின் பெரும் பகுதிகள் தெற்கு தெராய் சமவெளியில் அமைந்திருப்பதால், இம்மாவட்டத்தில் நெல் மற்றும் சணல் அதிகம் பயிரிடப்படுகிறது. மலைப் பகுதிகளில் சால மரங்கள் வளர்க்கப்படுகிறது.

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

நகராட்சிகள்[தொகு]

  • விராட்நகர் மாநகராட்சி
  • கோசி ஹரய்ச்சா நகராட்சி
  • சுந்தர் துலாரி நகராட்சி
  • பேல்பாரி நகராட்சி
  • பதரி-சனிஸ்சாரே நகராட்சி
  • உர்லாபாரி நகராட்சி
  • ரங்கேலி நகராட்சி
  • லேதாங் போகாதேனி நகராட்சி

இதனையும் காண்க[தொகு]

ஆள்கூற்று: 26°40′N 87°30′E / 26.667°N 87.500°E / 26.667; 87.500

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரங்_மாவட்டம்&oldid=2698348" இருந்து மீள்விக்கப்பட்டது