பாசூரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தின் மாநில எண் 7-இல் அமைந்த பாசூரா மாவட்டத்தின் வரைபடம்

பாசூரா மாவட்டம் (Bajura District) (நேபாளி: बाजुरा जिल्लाAbout this soundListen ), நேபாள மாநில எண் 7-இன் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றானதும், நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றானதும் ஆகும். மேல் இமயமலையில் அமைந்த இம்மாவட்டத் தலைமையிடம் மார்த்தாடி நகரம் ஆகும்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாசூரா மாவட்டத்தின் மக்கள் தொகை 134912 ஆகும். [1] இதன் பரப்பளவு 2,188 சதுர கிலோ மீட்டராகும்.

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 13,433 மில்லி மீட்டராகும். தட்ப் வெப்ப நிலை, கோடை காலத்தில் 40 பாகை செல்சியசும், குளிர் காலத்தில் பூஜ்யம் பாகை செல்சியசுக்கும் கீழ் உள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு இம்மாவட்ட மக்களின் முக்கியத் தொழிலாகும்.

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி மன்றங்களும்[தொகு]

பாசூரா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களும், நகராட்சிகளும்

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 24 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையில்[தொகு]

2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 134,912 ஆகும். அதில் பெண்கள் 69,106 (51%) ஆகவும், ஆண்கள் 65,806 (49%) ஆகவும் உள்ளனர். 24,908 வீடுகள் கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 62 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். எழுத்தறிவு விகிதம் 32% ஆக உள்ளது. இம்மாவட்டத்தில் பல இன மக்கள் வாழ்ந்தாலும், பேச்சு மொழி நேபாள மொழியாக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 0.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 19.7%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 36.4%
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் புல்வெளிகள் 3,000 - 4,000 மீட்டர்கள் 25.2%
மான்ட்டேன் #ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் தூந்திர மண்டலம் 4,000 - 5,000 மீட்டர்கள் 11.2%
பனிப்பொழிவு 5,000 மீட்டருக்கும் மேல் 6.4%
இமயமலைத் தொடர்கள் 3,000 - 6,400 மீட்டர்கள் 0.5%

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசூரா_மாவட்டம்&oldid=2164397" இருந்து மீள்விக்கப்பட்டது