கஞ்சன்பூர் மாவட்டம்
கஞ்சன்பூர் மாவட்டம் (Kanchanpur District) (நேபாளி: कञ्चनपुर जिल्लाⓘ), தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீம்தத்தா நகரம் ஆகும். மகாகாளி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]இம்மாவட்டம் 1,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 4,51,248 ஆகும்.[1][2] இம்மாவட்டத்தில் குமாவானி மொழி மற்றும் டடோலி மொழி (70%), தாரு மொழி (20%), நேபாள மொழி (7%) மற்றும் பிற மொழிகள் (3%) பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் தாரு இன பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [3]
அமைவிடம்
[தொகு]நேபாளத்தின் தூர மேற்குப் பகுதியில் இம்மாவட்டத்தின் கிழக்கில் கைலாலீ மாவட்டம், வடக்கில் டடேல்துரா மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[4] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Lower Tropical climate | 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) | 85.2% |
Upper Tropical | 300 - 1,000 மீட்டர்கள் 1,000 - 3,300 அடிகள் |
13.0% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் 3,300 - 6,600 அடிகள் |
1.8% |
நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்
[தொகு]- பைசே பீச்வா
- பேட்கோட் நகராட்சி
- பெலௌரி நகராட்சி
- பெல்தண்டி நகராட்சி
- பீம்தத்தா நகராட்சி
- டெக்ஹத்புலி
- தோடரா-சண்டினி நகராட்சி
- ஜலாரி-பிபால்டி நகராட்சி
- கிருஷ்ணாபூர் நகராட்சி
- புனர்வஸ் நகராட்சி
- ரைகாவார் பீச்சவா
- சங்கர்பூர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: 28 July 2015.
- ↑ "Districts of Nepal (Population, Area & Capital)". Statoids. 7 December 2012. http://www.statoids.com/ynp.html. பார்த்த நாள்: 7 December 2012.
- ↑ "District Development Committee, Kanchanpur".
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
வெளி இணைப்புகள்
[தொகு]