கஞ்சன்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°50′N 80°20′E / 28.833°N 80.333°E / 28.833; 80.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேபாளத்தில் கஞ்சன்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

கஞ்சன்பூர் மாவட்டம் (Kanchanpur District) (நேபாளி: कञ्चनपुर जिल्लाகேட்க), தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீம்தத்தா நகரம் ஆகும். மகாகாளி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

இம்மாவட்டம் 1,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 4,51,248 ஆகும்.[1][2] இம்மாவட்டத்தில் குமாவானி மொழி மற்றும் டடோலி மொழி (70%), தாரு மொழி (20%), நேபாள மொழி (7%) மற்றும் பிற மொழிகள் (3%) பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் தாரு இன பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [3]

அமைவிடம்[தொகு]

நேபாளத்தின் தூர மேற்குப் பகுதியில் இம்மாவட்டத்தின் கிழக்கில் கைலாலீ மாவட்டம், வடக்கில் டடேல்துரா மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[4] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) 85.2%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
13.0%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
1.8%

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

கஞ்சன்பூர் மாவட்டத்தின் நகராட்சிகளையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்
  • பைசே பீச்வா
  • பேட்கோட் நகராட்சி
  • பெலௌரி நகராட்சி
  • பெல்தண்டி நகராட்சி
  • பீம்தத்தா நகராட்சி
  • டெக்ஹத்புலி
  • தோடரா-சண்டினி நகராட்சி
  • ஜலாரி-பிபால்டி நகராட்சி
  • கிருஷ்ணாபூர் நகராட்சி
  • புனர்வஸ் நகராட்சி
  • ரைகாவார் பீச்சவா
  • சங்கர்பூர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: 28 July 2015. 
  2. "Districts of Nepal (Population, Area & Capital)". Statoids. 7 December 2012. http://www.statoids.com/ynp.html. பார்த்த நாள்: 7 December 2012. 
  3. "District Development Committee, Kanchanpur".
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சன்பூர்_மாவட்டம்&oldid=3237674" இலிருந்து மீள்விக்கப்பட்டது