டடேல்துரா மாவட்டம்
டடேல்துரா மாவட்டம் (Dadeldhura district) (நேபாளி: डडेलधुरा जिल्लाListen (உதவி·தகவல்)), நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் டடேல்துரா நகரம் ஆகும்.
டடேல்துரா மாவட்டத்தின் பரப்பளவு 1,538 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 142094 ஆகும். [1]டோட்டியாளி மொழி இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மாவட்டம் மலைப்பாங்கான பாலைவன நிலவமைப்பு கொண்டது. கயிலை மலைக்கு பயணிப்பவர்கள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றனர். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாக அமைந்துள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]
புவியியல்#தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பு |
---|---|---|
Lower Tropical climate | 300 மீட்டர்களுக்கு கீழ் | 0.6% |
Upper Tropical | 300 - 1,000 மீட்டர்கள் | 34.7% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 55.8% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 8.9% |
கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]
டடேல்துரா மாவட்டத்தில் இருபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012. Archived from the original on 2013-04-18. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No. 110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது