ரவுதஹட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் ரவுதஹட் மாவட்டம் அமைவிடம்

ரவுதஹட் மாவட்டம் (Rautahat District) (நேபாளி: रौतहट जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க, தெற்காசியாவில் அமைந்த நேபாளத்தின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கௌர் நகரம் ஆகும்.

நாராயணீ மண்டலத்தில் அமைந்த ரௌத்ஹட் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,126 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 6,86,722 ஆக உள்ளது. பிற மாவட்டங்களை விட இம்மாவட்டத்தில் இசுலாமியர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. 2001-இல் இசுலாமியர் மக்கள் தொகை 19.465% (1,06,111) ஆக இருந்தது.[1]இம்மாவட்டத்தில் பஜ்ஜிகா மொழி (60%), நேபாள மொழி (21%) மற்றும் இந்தி மொழி-உருது (13%) மற்றும் பிற மொழிகள் (6%) பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம் மற்றிம் மேல் வெப்ப மண்டலப் பகுதி என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [2]

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்[தொகு]

ரவுதஹட் மாவட்டம் கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

ரௌத்ஹட் மாவட்டத்தில் கௌர் நகராட்சியும், நூற்றி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூற்று: 26°46′N 85°16′E / 26.767°N 85.267°E / 26.767; 85.267

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவுதஹட்_மாவட்டம்&oldid=2169764" இருந்து மீள்விக்கப்பட்டது