உள்ளடக்கத்துக்குச் செல்

தோலகா மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°40′N 86°2′E / 27.667°N 86.033°E / 27.667; 86.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் தோலகா மாவட்டத்தின் அமைவிடம்

தோலகா மாவட்டம் அல்லது தோல்கா மாவட்டம் (Dolakha), (நேபாளி: दोलखा जिल्लाListen), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சரீகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 2,191 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்திற்கும் மேல் இமயமலையில் பரவியுள்ளது. இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணகெடுப்பின் படி 1,86,557 ஆக உள்ளது.[1] இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் திபெத் அமைந்துள்ளது. நேபாள மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது.

பீமேஷ்வரர் கோயில்

[தொகு]

இம்மாவட்டத்தின் தோலகா பஜாரில் அமைந்த பீமேஷ்வரர் கோயில் நேபாளி மக்களிடையே புகழ் பெற்றதாகும். இக்கோயில் உற்சவர் காலையில் பீமேஷ்வரராகவும், நண்பகலில் மகாதேவராகவும், மாலையில் திருமாலாகவும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

படக்காட்சிகள்

[தொகு]
சரீகோட் அருகில்
தோலகா பீம்சென் கோயில்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 1.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 26.2%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 28.5%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 16.6%
Montane ecology#Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள் 9.4%
Snow line 5,000 மீட்டர்களுக்கும் மேல் 17.4%

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

[தொகு]
தோலகா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

தோலகா மாவட்டம் 54 கிராமிய நகராட்சிகளும், இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலகா_மாவட்டம்&oldid=3101457" இலிருந்து மீள்விக்கப்பட்டது