போஜ்பூர் மாவட்டம், நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல் போஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

போஜ்பூர் மாவட்டம் (Bhojpur District) (நேபாளி: भोजपुर जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் உள்ள இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போஜ்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போஜ்பூர் மாவட்டம் 182,459 மக்கள் தொகையும்[1], 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.[1] இம்மாவட்டத்தின் வடக்கு மலைப் பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் வளர்கிறது.


புவியியல்[தொகு]

போஜ்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

நேபாளத்தின் எட்டு வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் போஜ்பூர் மாவட்டம், ஐந்தாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

3% மாவட்டப் பரப்பளவு 300 மீட்டர் உயரத்திலும், 31% பகுதிகள் 300 முதல் 1000 மீட்டர் உயரத்திலும், 50% பகுதிகள் 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திலும், 15% பகுதிகள் 2000 முதல் 3000 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

போஜ்பூர் மாவட்டத்தில் ராய் பழங்குடி மக்கள், நேவார் மக்கள் மற்றும் கிராதர்கள் எனும் வேடுவ இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி, நேபாள மொழிகள் பேசப்படுகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

Climate Zone[3] உயரம் % பரப்பளவு
தெற்கு பகுதியின் தட்ப வெப்பம் -300 முதல் 1,000 அடி 2.7%
நடுப்பகுதி தட்ப வெப்பம் 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
30.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
49.8%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
15.1%
மான்ட்டேன்#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடி
 1.7%


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 27°10′21″N 87°02′53″E / 27.17250°N 87.04806°E / 27.17250; 87.04806