கிராமிய நகராட்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாள கிராமிய நகராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம்


கிராமிய நகராட்சி மன்றம், (Gaunpalika or gaupalika (நேபாளி: गाउँपालिका) (Rural municipality), நேபாளத்தில் 1 சூன் 2017 முதல் புதிதாக துவக்கப்பட்ட கீழ்மட்ட உள்ளாட்சி நிர்வாக அமைப்பாகும். [1][2]

ஏற்கனவே 1990 ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருந்த கிராம வளர்ச்சிக் குழுக்களை 10 மார்ச் 2017ல் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக, நேபாள கூட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்கான அமைச்சகம், 1 சூன் 2017 முதல் கிராமிய நகராட்சி மன்றங்களைத் துவக்கியது.

தற்சமயம் நேபாளத்தில் செயல்படும் 744 உள்ளாட்சி அமைப்புகளில், கிராமப்புறங்களில் 481 கிராமிய நகராட்சி மன்றங்களும், நகரபுறங்களில் மாநகராட்சி, துணை-மாநகராட்சிகள், நகராட்சிகள் என 243 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது.[3][4]

நோக்கம்[தொகு]

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த கிராம வளர்ச்சிக் குழுக்கள் போன்றே கிராமிய நகராட்சி மன்றங்கள் செயல்படும். கூடுதல் பொறுப்பாக கேளிக்கை வரி, வீட்டு வரி, தொழில் மற்றும்வணிக நிறுவனங்கள் நடத்துவதற்கான வரி போன்ற வரிகளை நேரடியாக வசூலித்துக் கொள்ளும் உரிமை கிராமிய நகராட்சி மன்றங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. [5]இனி வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வரலாறு[தொகு]

1990க்கு முன்னர் கிராமப் பஞ்சாயத்து எனச் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்புகளை, கிராம வளர்ச்சி குழ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

10 மார்ச் 2017 அன்று கிராம வளர்ச்சி குழுக்கள் கலைக்கப்பட்டு,[6]கூடுதல் அதிகாரங்களுடன் 1 சூன் 2017 முதல் கிராமிய நகராட்சி மன்றங்கள் துவக்கப்பட்டது. [7]

அமைப்பு[தொகு]

கிராமிய நகராட்சி மன்றத்திற்கு ஒரு தலைவர் இருப்பர். 10 மார்ச் 2017ல் நேபாள அரசு 744 தலைவர்களை நியமித்தது.[2]

கிராமிய நகராட்சி மன்றங்களின் ஆண்டு வருவாய், குறைந்தது 10 இலட்சம் நேபாள ரூபாய் கொண்டிருக்கும்.[6] கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கிராமிய நகராட்சி மன்றத் தேர்தல்கள்[தொகு]

7 நேபாள மாநிலங்களில் உள்ள 481 கிராமிய நகராட்சிகளின் தலைவர், வார்டு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.[8] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[9] [10]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Coordination Committee". Government of Nepal. பார்த்த நாள் 1 June 2017.
  2. 2.0 2.1 "गाविस/जिविस खारेज, ७ सय ४४ स्थानीय तह आजैबाट कार्यन्वयनमा". Nepal Aaja. http://nepalaaja.com/2017/03/60256. பார்த்த நாள்: 12 April 2017. 
  3. "Recently increased 22 local units published in Nepal Gazette". The Himalayan Times. https://thehimalayantimes.com/nepal/recently-increased-22-local-units-published-in-nepal-gazette/. பார்த்த நாள்: 26 May 2017. 
  4. "481 chiefs appointed in rural municipalities". Nepal Republic Media Pvt. Ltd. myRepublica. 18 March 2017. http://www.myrepublica.com/news/16684/. பார்த்த நாள்: 12 April 2017. 
  5. "स्थानीय निकाय भङ्ग, सिंहदरबारकै हैसियतका ७ सय ४४ स्थानीय तह क्रियाशील". Nepal Aaja. http://nepalaaja.com/2017/03/60345. பார்த்த நாள்: 12 April 2017. 
  6. 6.0 6.1 "Government announces dissolution of VDCs, birth of village councils". Online Khabar. http://english.onlinekhabar.com/2017/03/10/397069. பார்த்த நாள்: 12 April 2017. 
  7. "Gaunpalikas to be called rural municipalities". The Himalayan. Himalayan Times. https://thehimalayantimes.com/nepal/gaunpalikas-called-rural-municipalities/. பார்த்த நாள்: 12 April 2017. 
  8. "Grassroots democracy". Himal Media. பார்த்த நாள் 12 May 2017.
  9. "Local polls after 20 years, finally". Nepal Republic Media. பார்த்த நாள் 2 April 2017.
  10. Local Election 2017 | Nepal - Overall Result