கங்காலினி கோயில்
Jump to navigation
Jump to search
கங்காலினி கோயில் | |
---|---|
[[Image:|280px|alt=|கங்காலினி கோயில்]] கங்காலினி கோயில் | |
நேபாளத்தில் கங்காலினி கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 26°33′N 86°55′E / 26.55°N 86.92°Eஆள்கூறுகள்: 26°33′N 86°55′E / 26.55°N 86.92°E |
பெயர் | |
தேவநாகரி: | कंकालिनी मन्दिर |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாநிலம்: | சாகர்மாதா மண்டலம் |
மாவட்டம்: | சப்தரி மாவட்டம் |
அமைவு: | பார்தாஹா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கங்காலினி |
சிறப்பு திருவிழாக்கள்: | நவராத்திரி |

கங்காலினி அம்மன் கோயிலில் கிருஷ்ணரின் சிற்பம்
கங்காலினி கோயில் (Kankalini Temple) (நேபாள மொழி:कंकालिनी मन्दिर) கங்காலினி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கங்காலினி அம்மன் கோயில் கிழக்கு நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள பார்தாதா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. சப்தரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ராஜ்பிராஜ் எனுமிடத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.
நவராத்திரி திருவிழாவின் போது இந்தியா மற்றும் நேபாள பக்தர்கள் இக்கோயிலுக்கு பெருந்திரளாக கூடி ஆயிரக்கணக்கான ஆடுகளைப் பலியிட்டு கங்காலினி அம்மனை வழிபடுகின்றனர்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "कंकालिनी मन्दिर". Madesh Special.
- ↑ "Kankalini Temple". Boss Nepal. பார்த்த நாள் 1 November 2012.