ஜானகி கோயில்
ஜானகி கோயில் | |
---|---|
மைதிலி மக்களின் கோயில்
|
|
நேபாளத்தில் அமைவிடம்
|
|
ஆள்கூறுகள்: | 26°43′50″N 85°55′32″E / 26.73056°N 85.92556°Eஆள்கூற்று: 26°43′50″N 85°55′32″E / 26.73056°N 85.92556°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | நெள லக்கா கோயில் |
பெயர்: | ஜானகி மந்திர் |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாவட்டம்: | தனுஷா மாவட்டம் |
அமைவு: | ஜனக்பூர் |
ஏற்றம்: | 78 m (256 ft) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சீதை (ஜானகி), இராமர் |
சிறப்பு திருவிழாக்கள்: | சீதா கல்யாணம், ராம நவமி, தீபாவளி] |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து-இராஜபுத்திர கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 70 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 27 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி பி 1910 |
இணையதளம்: | Janakitemple.gov.np |
ஜானகி கோயில் (Janaki Mandir) (நேபாளி: जानकी मन्दिर) நேபாள நாட்டின் தனுஷா மாவட்டத்தின் ஜனக்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சனகன் மகளான ஜானகிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோயிலாகும்.[1] நேபாள மற்றும் இராஜபுத்திரர்களின் கட்டிடக் கலையில் வெள்ளை நிறத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 50 மீட்டர் உயரமும், 4,860 சதுர அடி பரப்பளவும் கொண்டுள்ளது. மூன்று தளங்கள் கொண்ட இக்கோயில் பளிங்கு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அறுபது அறைகள் கொண்டது. பல வண்ண கண்ணாடிகள், சித்திரங்கள், நுணுக்க வேலைப்பாடுகள் கொண்ட சன்னல்கள் கொண்டுள்ளன. புராண வரலாற்றின் படி, மிதிலை நகரைத் தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் மன்னர் சனகரின் மகளான சீதைக்கும், அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசலை நாட்டின் மன்னர் தசரதனின் மகனான இராமருக்கும் இக்கோயில் அருகே அமைந்த மாளிகையில் திருமணம் நடந்தது.
பொருளடக்கம்
வரலாறு[தொகு]
நேபாள வட்டார வழக்கில் இக்கோயிலை நௌ லக்கா கோயில் என அழைப்பர். நௌ எனும் வட மொழிக்கு ஒன்பது என்றும் லக்கா என்பதற்கு இலட்சம் என்று பொருள். இக்கோயிலை அமைக்க ஒன்பது இலட்சம் ரூபாய் செலவிட்டு கட்டியதால் இப்பெயராயிற்று. ஜானகி கோயிலை, இந்தியாவின் திக்கம்கர் பகுதியின் இராணி விருச பானு என்பவர் 1910இல் கட்டினார்.
ஏப்ரல் 2015இல் ஏற்பட்ட நேபாள நில நடுக்கத்தில் ஜானகி கோயிலின் சில பகுதிகள் சேதமடைந்தன.[2]
திருவிழாக்கள்[தொகு]
- சீதா கல்யாணம் எனும் விவாக பஞ்சமி
- இராம நவமி
- திகார் திருவிழா
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://janakpurdham.com/janaki-temple/
- ↑ "Nepal Earthquake Takes Heavy Toll on Temples". NDTV (26 April 2015).
வெளி இணப்புகள்[தொகு]
- Sita Upanishad
- Janaki Mandir on Google Maps