பதான் அரண்மனை சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவில் பதான் அரண்மனை சதுக்கம்
பதான் அரண்மனை சதுக்கம்

பதான் அரண்மனை சதுக்கம் (Patan Durbar Square) நேபாள நாட்டில் அமைந்த மூன்று அரண்மனை சதுக்கங்களில் ஒன்றானது. இது காத்மாண்டு சமவெளியில் பதான் நகர மையத்தில் அமைந்துள்ளது. இவ்வரண்மனை சதுக்கம், யுனோஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றானது. இச்சதுக்கம் லலித்பூரை தலைநகராகக் கொண்ட நேபாள மல்ல மரபு மன்னர்களின் அரண்மனை எதிரில் கட்டப்பட்டதாகும்.

இவ்வரண்மனை சதுக்கம், நேபாள நாட்டு கட்டிடப்பாணியில் கட்டப்பட்டதாகும். இவ்வரண்மனை சதுக்கத்தின் தரை செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.[1] பதான் அரணமனை சதுக்கம் பல கோயில்களும், சிற்பங்களும் கொண்டது. கோயில்களின் நுழைவாயில்கள் அரண்மனையை நோக்கி கிழக்கு முகமாக கட்டப்பட்டுள்ளது.[2]

கோயில்களும் பிற சதுக்கங்களும்[தொகு]

பதான் அரண்மனை சதுக்கத்தில் கிருஷணன் கோயில், பீமன் கோயில், விசுவநாதர் கோயில், துளஜா பவானி கோயில், கேசவ நாராயணன் சதுக்கம், மூல் சதுக்கம் மற்றும் சுந்தரி சதுக்கங்கள் அமைந்துள்ளது.

2015 நிலநடுக்கம்[தொகு]

25 ஏப்ரல் 2015 நிலநடுக்கத்தின் போது பதான் அரண்மனை சதுக்கம் கடுமையாக சேதமடைந்தது.[3][4]

இதனையும் காண்க[தொகு]

பதான் நகரச் சதுக்கக் காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]